கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் விபரம் சேகரிக்கின்றது அரசாங்கம்!- வட கிழக்கிற்கு விசேட குழுக்கள் அனுப்பி வைப்பு
[ புதன்கிழமை, 01 மே 2013, 03:16.14 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சிகளின் ஒவ்வொரு முக்கிய உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியில் இரகசியக் குழுக்களை அரசாங்கம் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.
வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் சகல பாகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவோர் மற்றும் கூட்டமைப்போடு இணைந்து செயற்படுபவர்களின் விபரங்களை இக்குழுவினர் சேகரித்து வருகின்றனர்.
அண்மைக் காலமாக இலங்கையில் ஊடக நிறுவனங்கள் மீது நடாத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்நடவடிக்கைகளுக்காக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சிலிருந்து விசேட குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறிப்பாக இவர்கள் கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிக்க பணிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இக்குழுவினரின் பணிகள் மிக இரகசியமாகவே நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டதோடு, இவை தொடர்பில் இரகசியப் பொலிஸார் உயர் அதிகாரிகளும் அறிந்திருக்கவில்லை என்று தெரியவருகின்றது.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக ஆருடம் கூறப்படும் நிலையில் இரகசியக் குழுவினரின் செயற்பாடுகள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையில் பிளவை ஏற்படுத்த அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மக்கள் சந்தேகப்படும் நிலையில் இவ்விடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்
[ புதன்கிழமை, 01 மே 2013, 05:40.53 AM GMT ]
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புகள் விடயங்களுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி செய்யும் என அமெரிக்கா அரச திணைக்கள பேச்சாளர் பேட்ரிக் வென்ரெல் தெரிவித்துள்ளார்.
கருத்து வெளியிடும் சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை அதிகாரிகளை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து வெளியிடும் சுதந்திரம் பற்றி ஜெனிமா மனித உரிமை ஆணையத்தில் மாத்திரமல்ல இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதென அமெரிக்கா கூறியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையை ஆராய்ந்து கவலையடைந்ததாக மெரிக்கா அரச திணைக்கள பேச்சாளர் பேட்ரிக் வென்ரெல் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten