தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

திருமலை தகவல் நிலைய உடன்பாடு! அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு


பொதுநலவாய மாநாட்டிற்கு மேலதிகமாக செலவிடப்பட மாட்டாது: அரசாங்கம்
[ சனிக்கிழமை, 25 மே 2013, 02:18.47 AM GMT ]
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்காக மேலதிகமாக செலவிடப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மாநாட்டிற்கான சகல செலவுகளும் ஏற்கனவே வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. மேலதிகமாக செலவுகள் எதுவும் செய்யப்படவில்லை.
பயங்கரவாதத்தின் பின்னர் நாடு அடைந்துள்ள அபிவிருத்தியை உலக சமூகத்திற்கு எடுத்துரைப்பதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்கள பயணம் செய்வதற்காக விசேட வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

திருமலை தகவல் நிலைய உடன்பாடு! அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு
[ சனிக்கிழமை, 25 மே 2013, 02:20.52 AM GMT ]
தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
திருகோணமலையில் அமெரிக்கன் கோணர் என்ற பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது.

இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம,
உள்நாட்டில் எத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதானாலும் சரி, உள்ளூராட்சி சபைகளுடன் உடன்பாடுகளை செய்து கொள்வதானாலும் சரி, அதுகுறித்து வெளிநாட்டு தூதரகங்கள் முதலில்  இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தி அதற்குரிய அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
 உள்நாட்டு நடைமுறை இப்படியிருக்கையில் வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாமலேயே திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்க தகவல் நிலையத்தை அமைக்கும் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கவுள்ளேன். அத்துடன், அமெரிக்கத் தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பான விபரங்களை வெளிவிவகார அமைச்சுக்குத் தரத் தவறியது ஏன் என்று அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே திருகோணமலை நகரசபைத் தலைவர் செல்வராசாவுடன், இந்த உடன்பாட்டை செய்து கொண்ட அமெரிக்கத் தூதரக பேச்சாளரும், ஊடக, கலாச்சார, கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளருமான கிறிஸ்ரொபர் டீல், தாம் எந்த நடைமுறைகளையும் மீறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கத் தூதரகம் கண்டியிலும், யாழ்ப்பாணத்திலும் இதுபோன்ற தகவல் நிலையங்களை அமைத்துள்ளது. அதற்கு  இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதி ஏதும் பெறப்படவில்லை.
திருகோணமலையில் அமெரிக்க தகவல் நிலையத்தை அமைக்கும் விவகாரத்திலும் அதே நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளது.

இது பொதுமக்களின் நலனுக்காக, குறிப்பாக மாணவர்களின் நலனுக்காகவே அமைக்கப்படுகிறது.  விரைவில் இதுபோன்ற நிலையம் தெற்கிலும் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten