[ புதன்கிழமை, 22 மே 2013, 12:42.54 PM GMT ]
பதுளைக்கு வந்த மேற்படி ரயிலில் மயக்கமுற்றிருந்த இ.போ.ச. உத்தியோகத்தர் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர் பதுளை அரசினர் மருத்துவ மனை பொலிஸாருக்கு அளித்த புகாரில் தன்னிடமிருந்த 22 ஆயிரம் ரூபா பணம் கைவிரலில் அணிந்திருந்த ஒரு பவுண் எடையுள்ள மோதிரம் பெறுமதிமிக்க கையடக்க தொலைபேசி ஆகியனவும் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் ரயிலில் பதுளைக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்த போது என்னருகே இருந்த நபர் என்னுடன் நெருக்கமாக பேசிக் கொண்டு வந்தார். சிறிது நேரத்தில் நாமிருவரும் நண்பர்களானோம்.
அதையடுத்து அவர் தனக்கு வழங்கிய குளிர்பானத்தை அருந்தியதும் நான் மயக்கமுற்றேன். அதன் பிறகு என்ன நடந்ததென்று எனக்கு தெரியாது.
மருத்துவமனையில் நினைவு திரும்பியதும் என்னிடமிருந்த பணம் மோதிரம் கையடக்கத் தொலைபேசி காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தேன் என்றும் அவ் உத்தியோகத்தர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
பதுளைப் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொம்பனி வீதி கொள்ளை சம்பவம்! சந்தேகநபா்களான 4 பொலிஸாருக்கும் தொடா்ந்து விளக்கமறியல்!
[ புதன்கிழமை, 22 மே 2013, 12:35.09 PM GMT ]
கொழும்பு, கொம்பனி வீதி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நான்கு பொலிஸாரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர்கள் நால்வரையும் இனங்காண்பதற்கான அடையாள அணிவகுப்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த போதிலும் அந்த அடையாள அணிவகுப்பு இடம்பெறவில்லை.
கொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள சம்பத் வங்கியிலிருந்து ஒரு கோடி ரூபா வெளிநாட்டு பணத்தை எடுத்து சென்று கொண்டிருந்த போது கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நான்கு பேரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளவத்தையில் வெளிநாட்டு நாணயமாற்று நிலையத்தை நடத்துகின்ற கணபதிப்பிள்ளை தேவநேஷ்வரன் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்றபோதே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Geen opmerkingen:
Een reactie posten