[ புதன்கிழமை, 22 மே 2013, 02:52.31 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இராணுவத்தளங்கள் அனைத்தும், பலாலி இராணுவ தளத்துக்கு மாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய இதனை அறிவித்துள்ளார்.
பலாலி இராணுவ தளத்தை பிரதான இராணுவத் தளமாக மாற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று இராணுவத் தளங்கள் மாத்திரமே பேணப்படவுள்ளது.
ஏனைய அனைத்து தளங்களும், பலாலி தளத்துக்கு மாற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2ம் இணைப்பு
இந்த நாட்டில் எங்கெங்கு இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை வெளிநாட்டவர்களுக்கு கிடையாது
வடக்கில் இலங்கை இராணுவ முகாம்கள் குறித்து வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வெளியிடும் பல்வேறு கருத்துகள் தொடர்பாக இலங்கையின் இராணுவத் தளபதி விசனம் வெளியிட்டுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, 2009ல் போர் முடிவுக்கு வந்த போது யாழ்.குடாநாட்டில் 16 இராணுவ முகாம்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது மூன்று இராணுவ முகாம்கள் மட்டுமே அங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தைத் தோற்கடித்து பெறப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று தனக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் எங்கெங்கு இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு வெளிநாட்டவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது" என்றும் இலங்கை இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், அவ்வாறான சம்பவங்கள் ஏதும் இடம்பெறவில்லை என்று விசாரணை அறிக்கைகள் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மே 11. 1991ல் ராஜீவை கொல்ல மைசூரில் நடந்த கொலை முயற்சி! திடுக்கிடும் தகவல்கள்
[ புதன்கிழமை, 22 மே 2013, 03:34.29 AM GMT ]
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 22 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தீவிரவாதிகளின் சதியால் கொல்லப்பட்டார்.
அவரது நினைவு நாள் தீவிரவாத தடுப்பு தினமாக நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
அன்னாரது நினைவுநாளையொட்டி, மைசூர் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.
அப்போது சித்தராமையா பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார்.
அவையாவன..
1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக மைசூரிலேயே அவரை கொல்ல சதி நடந்தது.
பாராளுமன்ற தேர்தலுக்காக மைசூரில் அவர் பிரசாரம் செய்ய வந்தார். லலித் மஹால் பகுதியில் அவரது கார் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வேளையில் ஒரு வயதான பெண், திடீரென்று ராஜீவ் காந்தியின் காருக்கு குறுக்கே பாய்ந்தார்.
ராஜீவின் கார் சட்டென்று நின்றதால், அவரது காருக்கு பின்னால் வந்த கார்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் ராஜீவ் காந்தியை கொல்வதற்காக நடந்த சதி என்பது பின்னர் தெரிய வந்தது.
இது நடந்த 10 நாட்களுக்கு பின்னர் அவர் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சி ஒரு இளைய தலைவரை இழந்துவிட்டது.
அவரது மறைவுக்கு பிறகுதான் மைசூர் சம்பவம், ராஜீவ் படுகொலைக்கான முன்னோட்டம் என்பது தெரிய வந்தது என இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten