தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 mei 2013

மட்டக்களப்பில் நடைபெற்ற தந்தை செல்வாவின் 36வது நினைவு தின நிகழ்வு


முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகவே அசாத் சாலி கைது!- என்.கே.றம்ழான்
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 12:05.52 AM GMT ]
முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகவே அசாத் சாலி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அண்மைக்காலமாக நாடுபூராவும் முஸ்லிம் சமூகத்திற்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக ஒரு சில பௌத்த இனவாத குழுக்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பல்வேறு மத அடக்கு முறைக்கு கெதிராக குரல் கொடுப்பதற்கு எவருமற்ற அனாதைச் சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்தது.
அப்போது தயக்கமின்றி மிகவும் துணிகரமாக குரல் கொடுத்து முஸ்லிம்களின் பிரச்சினையை உலகறியச் செய்ததுடன் இனவாதிகளிலுடன் நேரடியாக விவாதித்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காகவும் ஐக்கியத்துக்காகவும் உரத்துக் குரல் கொடுத்த அசாத் சாலி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி இந்த நாட்டு முஸ்லிம்களை முழுமையாக கவளையடையச் செய்துள்ளது.
குறித்த அசாத் சாலியின் கைது அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் அற்ப சொற்பமாக கொண்டிருந்த நம்பிக்கையையும் தவிடு பொடியாக்கியுள்ளதோடு முஸ்லிம் சமூகத்தின் கருத்து சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஆட்சியில் அதிகமான முஸ்லிம் தலைமைகள் அதிகாரத்துடன் இருந்த போதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட பல்வேறு மத அடக்குமறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தயங்கிய போது துணிவுடன் குரல் கொடுத்தவர் அசாத் சாலி அவரது கைது விடயத்திற்கு வேறு காரணங்களை காட்டி நியாயப்படுத்த முடியாது.
இன்று அசாத் சாலி கைது செய்யப்பட்ட விடயம் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்ற ஒரு விடயமாக காணப்படுவதோடு அதற்காக என்ன விதமான நியாயங்களை தெரிவித்தாலும் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்ற மனநிலையில்லை என்பதே யதார்த்தமாகும்.
அசாத் சாலி அவர்கள் தான் குற்றமற்றவர் என்றும் தனது குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் கோரி நோயுற்ற நிலையிலும் உண்னாவிரதம் இருந்து வருவதானால் முஸ்லிம் சமூகத்திற்கு மேலும் கவலையையேற்படுத்தியுள்ளது.
எனவே, முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த அசாத் சாலியை விடுதலை செய்வதற்கு கட்சி, இனமத, பேதங்களுக்கு அப்பால் அனைத்து அரசியல் தலைமைகளும் முயற்சிக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பில் நடைபெற்ற தந்தை செல்வாவின் 36வது நினைவு தின நிகழ்வு
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 12:30.31 AM GMT ]
தமிழரசுக்கட்சியின் தாபகரும் தமிழர்களின் தந்தையெனவும் போற்றப்படும் தந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தினம் நேற்று தமிழரசுக் கட்சியால் அனுஸ்டிக்கப்பட்டது. 
வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துகொண்டதுடன் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன்,    சீ.யோகேஸ்வரன்  ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), மா.நடராசா,அம்பாறை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன், திருமலை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்றதுடன் தந்தை செல்வாவின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சேயோன் நிகழ்த்தியதுடன் தலைமையுரையினை நிகழ்வுக்கு தலைமைதாங்கிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகள்,சிறப்பு அதிதிகள் உரையாற்றியதுடன் முதன்மை அதிதியின் சிறப்பு சொற்பொழிவும் நடம்பெற்றது.
இந்நிகழ்வில், வடகிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக சாத்வீக ரீதியில் போராட அனைவரும் ஒன்றுபட்டு முன்வரவேண்டும் என மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten