தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 mei 2013

புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இளைஞன் நாடுகடத்தப்பட்டால் உயிருக்கு ஆபத்து!- உறவினர்கள் கவலை !


புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை இளைஞன் கோகுலராஜேஸ் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட குலசேகரம் கோகுலராஜேஸ் என்பவர் இலங்கையில் வசிக்க முடியாமல் கடந்த 2011 இல் கனடா நாட்டிற்கு சென்று புகலிடம் கோரியிருந்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக இவருடைய புகலிடக் கோரிக்கை நீதிமன்றத்தினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு மூன்று தடவைகள் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையிலும் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தற்போது இவர் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் தருவாயில் உள்ளதாகவும் அப்படி இவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் இவருடைய உயிருக்கு அது ஆபத்தாக அமையும் எனவும் இவருடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இளைஞன் கனடா சென்ற பிற்பாடு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இவருடைய வீட்டுக்கு பல தடவைகள் சென்று இவரைப் பற்றிய தகவல்களை அறிந்து சென்றுள்ளதாகவும் இதனாலேயே இந்த இளைஞனுக்கு இலங்கையில் உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் கருதுகின்றனர்.
குறித்த இளைஞனுடைய சகோதரியும் இராணுவ குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்பு கனடாவில் புகலிடம் பெற்று அங்கு வசித்து வருகின்றார் எனவும் குறித்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten