இன்று சம்மாந்துறைக்கு சென்ற அவர் அங்கு பத்திரகாளிம்மன் ஆலயத்துக்கு விஜயம் செய்து சேதமாக்கப்பட்ட பிள்ளையார் சிலையை பார்வையிட்டார். இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
பொதுபலசேனா முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பகிரங்கமாக நாங்கள் எதிர்த்து வருகின்றோம்.முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்தது.
முஸ்லிம்களின் தனித்துவம் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் எதிர்த்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் நூறு வீதம் தமிழ் மக்கள் வாழும் சம்மாந்துறை பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் ஆலயத்தின் முக பகுதியில் உள்ள விநாயகர் சிலை உடைக்கப்பட்டமையானது மிகவும் கவலைக்குரியதும் வேதனைக்குரியதுமாகும்.
இன முரண்பாடுகளை ஏற்படுத்த தூண்டும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் இரு சமூகங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten