[ சனிக்கிழமை, 04 மே 2013, 03:31.56 AM GMT ]
வட மாகாணசபைத் தேர்தல்களின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பிரிட்டனின் சனல்-4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளியை உலகம் முழுவதிலும் பிரசாரம் செய்ய புலி ஆதரவாளர்கள் நிதி திரட்டி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் சர்வதேச கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல் ஆணையாளர் சந்திப்பொன்றை நடாத்தினார்.
வட மாகாணசபைத் தேர்தல் குறித்து அறிவிக்கப்படாத காரணத்தினால் இது தொடர்பில் தற்போதைக்கு கருத்து வெளியிட முடியாது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கட்சி செயலாளர்களுடன் கலந்தாலோசித்து இது குறித்து தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
சனல்- 4 காணொளியை பிரசாரம் செய்ய புலிகள் நிதி திரட்டுகின்றனர்: சிங்கள ஊடகம்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 03:49.48 AM GMT ]
கிக்ஸ்மார்ட் என்னும் பெயரின் ஊடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்காக தலா 20, 000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் திரட்டப்படவுள்ளன.
ஆசியா, அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கும் இந்தக் காணொளியை எடுத்துச் செல்ல நிதி தேவைப்படுவதாகத் தெரிவித்து பணம் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சனல்- 4 காணொளியை பிரசாரம் செய்ய போதியளவு பணம் திரட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten