தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

பொதுபலசேனா அமைப்பு மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால்!


கண்டியில் தீக்குளித்த பௌத்த பிக்கு மரணம்
[ சனிக்கிழமை, 25 மே 2013, 05:34.59 AM GMT ]
கண்டி தலதா மாளிகைக்கு அருகில் தீக்குளித்த பௌத்த பிக்கு படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்றைய தலதா மாளிகைக்கு அருகில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட பௌத்த பிக்கு உடனடியாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவ்வாறு தீக்குளித்தவர் ஸ்ரீ சுகத்த விகாரையில் கடமையாற்றிய போவத்தே இந்திரரத்ன தேரர் என தெரியவந்துள்ளது.

மிருகவதை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவர் தீக்குளித்துள்ளார்.

இப் பௌத்த பிக்கு தீக்குளிப்பதற்கு முன்னதாக இது தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு தகவல் வழங்கியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த கண்டி பொலிஸார் இவருக்கு பெற்றோல் கிடைத்தது எவ்வாறு எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.
தீக்குளித்த பிக்கு மரணம்
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மாடுகள் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிக்கு தீக்குளித்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுபலசேனா அமைப்பு மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால்!
[ சனிக்கிழமை, 25 மே 2013, 05:33.28 AM GMT ]
மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு சவால் விடுக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பு மாநாடு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ தலையீடுகளிலிருந்து மன்னார் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும்,  அதன்போது மன்னார் பேராயரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது அமைப்பிற்கு ஆதரவளிப்பதாகவும், விரைவில் இம்மாநாடு நடத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்

Geen opmerkingen:

Een reactie posten