இவர்களே அத்துமீறி ஆயுத வன்முறை செய்து குடியேறிய குற்றவாளிகள்!!இவர்களிடம் தஞ்சம் கேட்கும் நமக்கு பதில் வேறென்னவாக இருக்கும் ?? அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றுமாறு வலியுறுத்தி புகலிடக் கோரிக்கையாளர்கள் மேற்கொள்கின்ற உண்ணாவிரதம் வெற்றி அளிக்காது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.
மெல்போன் தடுப்பு நிலையத்தில் உள்ள 27 புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றதனைத் தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவர்கள் ஏன் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர் என்பதற்கு குடிவரவுத் திணைக்களம் கருத்து எதனையும் தெரிவிக்காது.
இதேவேளை, அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என நம்பப்படுகின்றது.
ஆனால் இவர்களை சமூகத்தினுள் விடுவதற்கு பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி மறுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அடிப்படையில் அகதிகள் மதிப்பிடப்படுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் ஜுலியா கில்லார்ட் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உண்ணாவிரதம் மேற்கொள்கின்ற அகதிகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். ஆனால் தற்போது இவர்கள் திரவ ஆகாரங்களை உட்கொள்வதாகவும் அகதிகளுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் பேச்சாளர் அயன் ரின்ரோல் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten