[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 07:44.49 AM GMT ]
“ரோம் எரியும் வேளையில்” என்று இந்த ஒளிப்படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பொதுபல சேனா அமைப்பின் கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலம் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை நடத்த ஊக்குவிக்கிறார் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான பெளத்த அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹக்கீம் விசனம் வெளியிட்டிருந்தார்.
பெபிலியானவில் முஸ்லிம் வணிக வளாகம் தாக்கப்பட்ட பின்னர், அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் படி சிறிலங்கா அதிபரிடம் ரவூப் ஹக்கீம் கேட்டிருந்தார். ஆனால் அதற்கு சிறிலங்கா அதிபர் செவிசாய்க்கவில்லை.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுகாலை வரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டக்குழுவின் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆராயப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுகாலை வரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டக்குழுவின் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆராயப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஹக்கீமும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கத் தவறினால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்தநிலையிலேயே நேற்றுமாலை சிறிலங்கா அதிபருடன் இணைந்து அவர் ரக்பி ஆட்டத்தை ரசித்து மகிழ்ந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சீன தைபே அணியுடனான ரக்பி ஆட்டத்தில் சிறிலங்கா அதிபரின் மகனும் சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான யோசித ராஜபக்ச சிறிலங்கா அணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.
இதில் சிறிலங்கா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இன முரண்பாட்டைத் தூண்ட பாதுகாப்புச் செயலர் கோத்தபாய முயற்சி! ஹக்கீம் குற்றச்சாட்டு!
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 02:49.22 AM GMT ]
பிக்கு ஒருவர் தலைமையிலான குழுவொன்று, அண்மையில், பெப்பிலியான பிரதேசத்தில் உள்ள பெசன் பக் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுபல சேனாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இனங்களுக்கு இடையில் விரோதத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் அரசு துரித நடவடிக்கை எடுக்காது போனால், அது தொடர்பாக சர்வதேசத்தின் கவனம் திரும்பும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பினால், தொடர்ந்தும் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பாக அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றைக் கூட்டுமாறு தாம் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்து விட்டார் எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
தனது கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்படும் என உறுதியளித்தார்.
எனினும், அது போதுமானதல்ல என்பதே எனது நிலைப்பாடு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten