தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 april 2013

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!


இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியிடம் நட்ட ஈடு கோரி மூன்று புலி ஆதரவாளர்களினால் அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை மூவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதவான் குழுவொன்று விசாரணை செய்துள்ளது.
ஜனாதிபதி பதவியை வகிக்கும் வரையில் மஹிந்த ராஜபக்சவிற்கு இராஜதந்திர வரப்பிரசாதம் காணப்படுவதாகவும் இதனால் வழக்குத் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஜனாதிபதிக்கு ராஜதந்திர வரப்பிரசாதம் வழங்கியமைக்கு எதிர்ப்பை வெளியிட்ட புலி ஆதரவாளர்கள், அமெரிக்க சட்ட வல்லுனர் புருஸ் பெய்ன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
லண்டனைச் சேர்ந்த காசிப்பிள்ளை மனோகரன் உள்ளிட்ட மூன்றுபேர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடர முடியாது என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியி;ட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten