தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 april 2013

இலங்கை தமிழர்களுக்காக தே.மு.தி.க. 2014 பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார்! விஜயகாந்த்!


இலங்கை பிரச்சினைக்காக தே.மு.தி.க வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தயாராக உள்ளது. இதனை மற்ற கட்சிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
சட்டசபையிலிருந்து 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சென்னை மாவட்ட செயலாளர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-

சட்டசபையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து உள்ள தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் நடிகராக இருந்ததிலிருந்தே இலங்கை தமிழர்களுக்காக பலவகையில் போராடியுள்ளேன்.
என் மகனுக்கு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெயர் வைத்துள்ளேன்.
இலங்கை தமிழர்கள் முகத்தில் சிரிப்பை காணும் வரை என் பிறந்தநாளை கொண்டாட கூடாது என்று முடிவெடுத்து, அதன்படி நடந்து வருகிறேன்.
கட்சி தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறேன்.
2009ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை இலங்கை பிரச்சினைக்காக தே.மு.தி.க. புறக்கணித்தது. மற்ற கட்சிகளையும் புறக்கணிக்க வலியுறுத்தினேன். ஆனால் யாரும் செய்யவில்லை.
அப்படி புறக்கணித்திருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார். தமிழ்ஈழ மக்களுக்கும் விடுதலை கிடைத்திருக்கும்.
தற்போது வருகின்ற பாராளுமன்ற தேர்தலை இலங்கை தமிழர்களுக்காக தே.மு.தி.க. நிச்சயம் புறக்கணிக்கும். மற்ற கட்சிகளும் கண்டிப்பாக தேர்தலை புறக்கணிக்க வேண்டும். தவறினால் நாங்கள் மறுபரிசீலனை செய்வோம்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Geen opmerkingen:

Een reactie posten