அநீதியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளை மீளவும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அநீதியான முறையில் மக்களிடமிருந்து காணிகள் சுவீகரிக்கப்பட்டு சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிலர் ஒரு சிறிதளவு காணிகூட இன்றி அபகரிக்கப்பட்ட காணிகளை கோருகின்றனர்.
அரச காணிகளைப் பெற்றுக்கொண்டு சிலர் வர்த்தகர்களுக்கு அதனை விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது, உரியவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காணி அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten