தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 april 2013

யாழ்ப்பாணத்தில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு


கைதடி சிறுவர் இல்லத்தில் இருந்த 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளனர்! பொலிஸில் புகார்: 7 சிறுமிகளுக்கு வைத்திய பரிசோதனை
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 02:37.51 AM GMT ]
யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை 11 மணி தொடக்கம் காணாமல் போயுள்ளதாக சிறுவர் இல்ல நிர்வாகம் மற்றும் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள பிள்ளைகள் சார்பாக இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் இராஜசிங்க தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாக கைதடியில் உள்ள தனியார் சிறுவர் இல்லத்தில் 35 மேற்பட்ட சிறுவர்கள் வாழ்ந்து வருவதாகவும் அண்மைக்காலமாக இவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் விரக்கதியடைந்த சிறுமி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக ஏனைய பெண் பிள்ளைகளால் இது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இது தொடர்பில் சிறுவர் இல்ல நிர்வாகத்திடம் கேட்டபோது அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் 10 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளதாகவும் இதில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு உத்தியோகஸ்தரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வடமாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு உத்தியோகஸ்தரிடம் கேட்டபோது,
இது தொடர்பான தகவல்களை தன்னால் தரமுடியாது என்றும் அவ்வாறு தகவலை தான் வெளியில் சொன்னால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எற்கனவே நான்கு வருடங்களில் 10 மேற்பட்ட இடமாற்றங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து காணாமற்போன சிறுமிகளில் நால்வர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்- சிறிபவானந்தராஜா
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்திலிருந்து காணாமற்போன சிறுமிகளில் நான்கு சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் குறிப்பிடுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். கைதடிப் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 11 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டை அடுத்து நேற்று திங்கள் கிழமை இரவு குறித்த சிறுமிகளில் 8 பேர் யாழ்.சாவகச்சேரி பொலிஸாரினால் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர்.
குறித்த சிறுமிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர்களில் நான்கு சிறுமிகளுக்கு பாலியல் வன்புணர்வு தொடர்பாகவும் அவர்களின் சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகள், பெண்குறி சிதைவுகள் தொடர்பில் மருத்துவப் பரிசோதனை தகுந்த மருத்துவ நிபுணரினால் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது மருத்துவ அறிக்கையின் படி குறித்த சிறுமிகள் நான்கு பேர் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ சான்றுகள் குறிப்பிடுவதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சிறிபவானந்தராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்.சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கையில், யாழ்.கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து காணாமல் போன சிறுதிகள் தொடர்பில் தேடுதல் நடத்தப்பட்டதில் ஒரு சிறுமி கைது செய்யப்பட்டதை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏனைய 7 சிறுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர் மற்றும் பொண்கள் பொலிஸ் பிரிவில் சிறுமிகள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமிகள் தொடர்பில் யாழ்.சிறுவர் நீதிமன்றிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக யாழ்.சாவகச்சேரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழில் தனிமையில் செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கும் கும்பல்! – யாழ்.பொலிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 06:52.51 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் தனிமையில் செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அபகரிக்கும் மோட்டார் சைக்கிள் கும்பல் தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.
யாழில் தனிமையில் தங்க ஆபரணங்களை அணிந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் அவர்களை வழிமறித்து தங்கள் கையில் உள்ள கடதாசி ஒன்றைக் கொடுத்து இந்தக் கடதாசியில் இருக்கும் விலாசம் எங்கு இருக்கிறது என விசாரிப்பார்கள்.
அதன் பின்னர் அப் பெண் குனிந்து இந்த கடதாசியிலுள்ள விலாசத்தை அவதானிக்கும் போது அப் பெண் அணிந்து இருக்கும் தங்கச் சங்கிலிகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகின்றனர்.
குறித்த மோட்டர் சைக்கிள் நபர்கள் தலைக் கவசம் அறிந்து இருப்பதுடன் கைகளில் கத்தி போன்ற கூரிய ஆயதங்களையும் தம் வசம் வைத்திருப்பதாக யாழ்.குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 02:31.06 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக 5000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை ஓரு கும்பல் புழக்கத்தில் விடுவதாக யாழ்ப்பாண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டிகளில் வந்து இவ்வாறு பணத்தை மாற்றிக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹோட்டல்கள், ஜவுளிக் கடைகளில் இவ்வாறு குறித்த போலி நாணயத்தாள்கள் மாற்றப்படுகின்றன.
குறித்த நாணயத்தாள்களை உன்னிப்பாக கவனித்து கொடுக்கல் வாங்கல் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten