[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 10:38.28 AM GMT ]
கடந்த 7ம் தேதி இந்திய - இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.
இலங்கையில், மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் இஸ்ரேல் நாட்டு பெண் ஒருவர் மீது பாலியல் வல்லுறவு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், இன்று இவர்கள் மீதான வழக்கு விசாரணையின் போது, தமிழக மீனவர்களின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 26ம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் பெண் மீது பாலியல் வல்லுறவு
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 12:37.04 AM GMT ]
விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை சென்றிருந்த இஸ்ரேல் பெண் ஒருவரே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார்.
மிரிஸ்ஸ கடற்கரையில் சூரியக் குளியலில் ஈடுபட்டிருந்த போது நபர் ஒருவரை தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, குறித்த இஸ்ரேலிய பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் மிரிஸ்ஸ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கணவருடன் குறித்த பெண் மிரிஸ்ஸ ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten