தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 april 2013

இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும்!-இதுவே தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!!


இறுதி யுத்தத்தில் அனைத்தையும் இழந்த மக்களுக்கு ஓலைக் குடிசைகளுக்குள் வாழும் உரிமையும் மறுப்பு!- வினோ எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 07:38.36 AM GMT ]
முள்ளியவளையில் மீளக்குடியமர்ந்த மக்களின் உயிர்களையும். உடைமைகளையும் காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அம்மக்கள் ஒவ்வொரு இரவுப் பொழுதையும் நித்திரை, நிம்மதி இழந்தும் மரணப் படுக்கையிலேயே கழித்துக் கொண்டிருப்பதாக பா. உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முள்ளியவளை மத்தி கிராம சேவையாளர் பிரிவில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிரியை இனங்காணமுடியாதவாறு கறுப்பு அரசியல்வாதிகளின் இரும்புத்திரை பாதுகாப்பில் நடாத்தப்படும் கொலைப் பயமுறுத்தல்களுக்கும், வீடெரிப்புகளுக்கும் அரசாங்கம் முடிவு கட்ட வேண்டும்.
இறுதி யுத்தத்தில் அனைத்தையும் இழந்த மக்கள் ஓலைக் குடிசைகளுக்குள் வாழும் உரிமையும் இன்று மறுக்கப்படுகின்றது.
இது அப்பிரதேசத்திலுள்ள ஏனைய மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை போன்ற செயலாகும். மக்களை அச்சமூட்டி, வெளியேற்ற திரை மறைவில் எடுக்கப்படும் முயற்சியின் ஆரம்பமே இது.
தமிழ் இனத்தின் காவலர்களாக நாலாண்டுகளுக்கு முன்னர் நாடகமாடி, வேடமிட்டவர்களும் இதன் பின்னணியில் இருப்பது தமிழர் நெஞ்சங்களில் வேதனை தரும் செயலாகும்.
அரசாங்கம் இது போன்ற நாசகார செயல்களில் ஈடுபடும் வன்முறையாளர்களையும், அவர்களுக்கு துணை போபவர்களையும் பாதுகாப்பிலிருந்தும், அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துவதிலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும்!-இதுவே தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 08:13.37 AM GMT ]
சர்வதேசத்தின் பார்வையில் இடைக்கால நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும். இதுவே தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் காணிகளைப் பறிப்பதற்கு இலங்கை அரசு திட்டமிட்டு வருகின்றது. இதே போக்கில் போகுமானால் இன்னும் 5 வருடங்களில் தமிழ் மக்களுக்கு எதுவுமே இல்லாத நிலை ஏற்படும்.
வலி. வடக்கில் 20 வருடங்களாக மக்கள் வெளியேறி இருக்கின்றனர். அவர்களது தாயக நிலத்தைக் கைப்பற்றுவதை அரசு குறியாக கொண்டுள்ளது. சொந்த மக்கள் அவர்களது காணிகளுக்கு போக முடியாத நிலையை அரசு ஏற்படுத்தி அவர்களது காணியைக் கையகப்படுத்தியுள்ளது.
தமிழ் அரசியல் தரப்புக்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இந்த விடையத்தில் ஒரு நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். காணி பறிப்பு தொடர்பில் தமிழ் தரப்பினர் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.
மக்களுடன் வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னேடுக்க வேண்டும் ஜனநாயக ரீதியில் மக்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத தீர்வை முன்வைப்பதற்கு வடமாகாண சபைத் தேர்தலை வடபகுதியில் ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுவதற்கு அரசு முயல்கின்றது. அதனை எங்கள் கட்சி எதிர்க்கும்.
மக்களின் பலத்தை சரியாகப் பயன்படுத்தி மக்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக போராட வேண்டும். அதற்கான காலம் நெருங்கியுள்ளது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை தேவை. அவை குறுகிய காலத்தில் நடைபெற்ற பேர்க்குற்ற விசாரணை மட்டும் போதாது 65 வருடங்களாக நடைபெற்ற தமிழ் இன அழிப்பு தொடர்பாகவும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten