தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 april 2013

வடமாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களுக்காக ஆட்களைத் திரட்டும் தீவிர முயற்சியில் ஈபிடிபியினர் !


வடமாகாண சபை தேர்தல் பிரசாரங்களுக்காக வன்னியில் சிறீலங்கா சுதந்தரக்கட்சியால் சிவில் பாதுகாப்பு படையை (சி.எஸ்.டி) சேர்ந்த இளைஞர் யுவதிகளும், தொண்டர் ஆசிரியர்களும் ஈபிடிபியால் தயார்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என்ற அறிவித்தல்கள் வெளியாகியுள்ள நிலையில், எதைச் செய்தாவது வடமாகாண சபையில் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அரச கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் ஈபிடிபியும் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரசாரங்களுக்காக ஆட்களைத் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தீவிரமாக வடக்கில் இடம்பெற்று வருகின்றன. அதேநேரம் வன்னியில் தொண்டு ஆசிரியர்களாக பணிபரிந்து வருபவர்களை நிரந்தர நியமனம் பெற்றுத்தரலாம் என்று கூறி ஏமாற்றி ஈபிடிபி தமது பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஈபிடிபி முக்கியஸ்தர் ஜெயராஜ்(கிருபன்) என்பவரின் தலைமையில் மாகாணசபை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு வன்னி தொண்டு ஆசிரியர்களை நிரந்தர நியமனம் என்று கூறி ஏமாற்றி திரட்டும் நடவடிக்கைகள் மும்முரமாக இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல்களின் போதும் ஒரு மாதத்துக்குள் நிரந்தர நியமனம் பெற்றுத்தரலாம் என்று கூறி ஈபிடிபி இவர்களை தமது பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி ஏமாற்றியது.
வடமாகாணசபைத் தேர்தலில் சிவில் பாதுகாப்பு படை (சி.எஸ்.டி) யினர் மிகவும் தீவிரமான முறையில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களில் பலர் தற்போது அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten