தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 april 2013

யாழ். நீதிமன்ற நீதவானின் போக்குவரத்துக்கு இடையூறு: மாணவர்கள் 5 பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !


 [ பி.பி.சி ]
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 5 பேர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, எதிர்வரும் 23ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா இத்தகவலைத் தெரிவித்தார்.
குறித்த மாணவர்கள் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் சைக்கிள்களில் சமாந்தரமாக பயணித்துக் கொண்டிருந்த வேளை, யாழ். நீதிமன்ற நீதவான் அவ்வழியாக காரில் வந்துள்ளார்.
நீதவான் பயணித்த காருக்கு இடம்கொடுக்காது குறித்த மாணவர்கள் ஐவரும் வீதியில் சைக்கிள்களில் சமாந்தரமாக பயணித்து கொண்டிருந்துள்ளனர்.
குறித்த மாணவர்கள் 5 பேரும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தாக நீதிபதியினால் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலின் பிரகாரம் 5 மாணவர்களும் யாழ். போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து எதிர்வரும் 23ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten