தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

முன்னாள் தமவிபு கட்சி உறுப்பினர் கோணமலை கண்ணதாசன் வீட்டின் மீது தாக்குதல்!


மாத்தளன் பகுதியில் சிங்கள - தமிழ் மீனவர்களிடையே முறுகல்! கடற்படையினர் சிங்கள மீனவர்களை வெளியேற்றினர்!
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 09:30.40 AM GMT ]
முல்லைத்தீவு- மாத்தளன் பகுதியில் நிரந்தரமாக தங்கியிருந்து கடற்றொழிலில் செய்வதற்காக வந்திருந்த சிங்கள மீனவர்களையும், படகுகளையும் பிரதேச மீனவர்கள் தீயிட்டு கொழுத்த முயன்ற நிலையில் கடற்படையினர் தலையிட்டு சிங்கள மீனவர்களை திருப்பியனுப்பியிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
அன்றைய தினம் மாலை சுமார் 20படகுகளில் வந்த சிங்கள மீனவர்கள் மாத்தளன் பகுதியில் இறங்கி கடற்றொழிலில் ஈடுபட முயன்றுள்ளனர்.
இதனை அவதானித்த பிரதேச மீனவர்கள் அவர்களது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், சிங்கள மீனவர்கள் எமது பிரதேசத்தில் தங்கிருந்து கடற்றொழில் செய்ய நினைத்தால் அவர்களது படகுகளையும், மீனவர்களையும் தீயிட்டு கொழுத்துவோம் என பெற்றோல் கலன்களுடன் கரையோரத்தில் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனையடுத்து கடற்படையினர் இதில் தலையிட்டு சிங்கள மீனவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
எனினும் தாம் மீண்டும் வருவோம் என சிங்கள மீனவர்கள் கூறிச்சென்றுள்ளனர். ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கரையோரப் பிரதேசங்கள் சிங்கள மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அந்தந்த பிரதேசங்களை சேர்ந்த தமிழ் மீனவர்கள் தொழிலை இழந்து நிற்கும் நிலையில், தற்போது மாத்தளன் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சிங்கள மீனவர்களின் வருகைக்கு இரணைப்பாலை கடற்றொழிலாளர் சங்கமும், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசமும், கடற்படையினரும் அங்கீகாரம் கொடுத்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முன்னாள் தமவிபு கட்சி உறுப்பினர் கோணமலை கண்ணதாசன் வீட்டின் மீது தாக்குதல்!
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 10:34.26 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதியில் அமைந்துள்ள முன்னாள் த.ம.வி.பு கட்சி உறுப்பினர் கோணமலை கண்ணதாசன் என்பவரின் வீடு நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தாக்கப்பட்டு அங்குள்ள உடைமைகளுக்கு சேதமேற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் த.ம.வி.பு கட்சி உறுப்பினரும் வீட்டு உரிமையாளருமான கோணமலை கண்ணதாசன் தெரிவித்துள்ளதாவது:
நேற்று இரவு 8.00மணியளவில் நான் வீட்டில் இல்லாத போது சிலர் இந்த நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான முழுப்பொறுப்பும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனும் த.ம.வி.பு கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனுமே கூற வேண்டும் என்றார்.
சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்த வீட்டு உரிமையாளரின் மனைவி ருஷாந்தகுமாரி கருத்துத் தெரிவிக்கையில்,
வீட்டின் ஓடுகளுக்கு கல்லெறிந்து விட்டு பின்னர் வீட்டு வேலிகளை உடைத்து விட்டு வீட்டிற்குள் உட்புகுந்த குறித்த கும்பல் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, அலுமாரி, கதிரைகள் மற்றும் வீட்டிலுள்ள உபகரணங்களை உடைத்து விட்டு சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை எடுத்துச் சென்றனர்.
இதேவேளை வீட்டிலே இருந்த எனது பிள்ளைகளுக்கு அடித்து அவர்களை தாக்கியதுடன் அவர்களில் இருவரின் தலையில் பலமாக அடிக்கப்பட்டு தற்போது ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இவர்கள் பல முறை எமக்கு இப்படியான நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு வந்து விசாரித்ததாகவும் குறித்த மனைவி மேலும் தெரிவித்தார்.
தாக்குதலுக்குள்ளான வகுசனா (வயது13), ரதுசன் (வயது04), ஆகிய எனது இரு பிள்ளைகளும் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இது தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கருத்து தெரிவித்த போது,
நேற்று இடம்பெற்ற சம்பவத்திற்கும் எனக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை. குறித்த வீட்டு உரிமையாளரான கோணமலை கண்ணதாசன் என்பவர் முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (ஆயுதக் கலாசார காலகட்டத்தில்) இவர் ஒரு உறுப்பினராக இருந்தார். கட்சியை விட்டு விலகியதன் பின்னர் அவருக்கும் கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை.
குறித்த வீட்டு உரிமையாளர் இரு திருமணங்கள் முடித்துள்ளார். இவரின் இரண்டாவது மனைவியின் தம்பி, முதலாவது மனைவியின் தம்பி ஆகியோருக்கிடையில் இடம்பெறுகின்ற குடும்பப் பிரச்சினையை இவர்கள் அரசியலாக்கி அதில் இலாபம் அடைய முனைகின்றனர் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten