[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 11:18.42 AM GMT ]
இனியாவது, இந்திய மத்திய அரசாங்கத்தின் கண்கள் திறக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க இதய சுத்தியான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களை பற்றி அவதூறாக பேசி வரும் இந்தியாவிலுள்ள இலங்கை தூதர் கரியவாசத்தை நாட்டை விட்டு வெளியேற்ற கோரி மதிமுக மகளிரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக, சண். குகவரதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை வந்து சென்ற தமிழக எம்.பிக்கள் குழுக்களின் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சவுகத்தா ராய் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளில் சிங்கள குடியேற்றங்கள், வடக்கில் சிவில் அதிகாரமில்லை, தமிழ் மக்கள் அச்ச உணர்வுடனேயே வாழ்கின்றனர், தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அரசியல் அதிகாரங்களை வழங்காது என உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், இந்தியாவே சர்வதேசமோ அதற்கு ஆக்கபூர்வமாகச் செவிமடுத்ததாகத் தெரியவில்லை.
இன்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினரே நேரில் வந்து பார்த்து எமது மக்களின் நடைபிணங்களான, அதிகாரமற்ற, சுதந்திரமற்ற வாழ்க்கை முறையினை தினம் தினம் அனுபவித்து வருகின்றார்கள் என்ற சகப்பான உண்மையை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
எனவே, இனிமேலாவது இந்திய மத்திய அரசாங்கம் வெறுமனே பிரேரணைகளையும் அறிக்கைகளையும் வெளியிடாது எமது மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை பெற்றக் கொடுப்பதற்கு நேரடியாக களத்தில் குதிக்க வேண்டும்.
ஏனென்றால், இந்தியாவுக்கு அந்த தார்மீகக் கட்டுப்பாடு உள்ளது. பதின்மூன்றாவது திருத்தத்தை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தது இந்தியா. ஆனால், 25 வருடங்கள் கழிந்தும் அதன் பலாபலன்களை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க இந்தியாவால் முடியாமல் போயுள்ளது.
சர்வதேச நாடுகளை விட தமிழ் மக்கள் இந்தியாவையே தமது பாதுகாவலனாக நம்பியுள்ளனர். எனவே, அச்சத்துடன் வாழும் தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்து, மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளை பெற்றுக் கொடுக்க அவசரமான இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தூதுவர் காரியவசத்தை வெளியேற்றக் கோரி மதிமுக மகளிர் அணியினர் உண்ணாவிரதம்!
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 12:03.54 PM GMT ]
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்,
உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களிடம் தனித் தமிழ் ஈழத்திற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,
தமிழர்களை பற்றி அவதூறாக பேசி வரும் இந்தியாவிலுள்ள இலங்கை தூதர் காரியவசத்தை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ம.தி.மு.க மகளிர் அணியினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
காலை தொடங்கிய உண்ணாவிரதத்திற்கு ம.தி.மு.க மாநில மகளிர் அணி துணை செயலாளர் கிரிஜா சுப்ரமணியன் தலைமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten