தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 april 2013

நடிகர் சங்க உண்ணா விரதம்! அறிக்கை தருமாறு இலங்கை வேண்டுகோள்!


இலங்கை அரசுக்கு எதிராக சென்னையில் தென்னிந்திய பிரபல தமிழ் திரைப்பட நட்சத்திரங்களால் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பில் தங்களுக்கு அறிக்கை ஒன்றினை வழங்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்திய அரசைக் கேட்டுள்ளது.
இந்த வேண்டுகோள் இந்தியாவிலுள்ள இலங்கையின் பிரதித் தூதுவர் ஊடாக விடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் பிரபல தமிழ் நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார் உட்படலான பல முக்கிய நடிகர்கள் இலங்கைக்கு எதிராகப் பேராட்டம் நடத்தியதுடன் ஈழத் தமிழர்கள் தொடர்பில் ஏழு தீர்மானங்களையும் நிறைவேற்றியிருந்த நிலையிலேயே இலங்கை அரசினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten