[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 08:08.02 PM GMT ]
யாழில் இன்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவை அமைப்பு விசாரணை நடத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தந்தை செல்வா எந்த நிலம் தமிழர்களுக்கு பாதுகாப்பு என்று நினைத்தாரோ, எந்த நிலத்தில் தமிழர்கள் தமது ஆட்சியை நிலை நாட்ட வேண்டும் என்று நினைத்தாரோ அந்த நிலம் இன்று அபகரிக்கப்பட்டு தமிழர்களின் நிலம் இல்லை என்று கூறும் அளவிற்கு அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
2009 ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறிய அரசாங்கம் அதன் பின்னர் தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கைட்யில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக தமிழ் மக்கள் என்ற இன அடையாளத்தை இல்லாமல் செய்கின்ற நடவடிக்கையில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது. இதனை இராணுவத்தினர் மூலமாகவும் பெளத்த பிக்குகள் மூலமாகவும் மேற்கொண்டு வருகின்றது.
தமிழ் மக்கள் நடாத்திய அறவழி போராட்டங்கள் அனைத்தையும் அரசாங்கம் தனது இராணுவத்தின் மூலமாக அடக்கு ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
அதேபோல மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை சந்திக்க முடியாத ஒரு சூழ்நிலை நிலவுகின்றது இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தினை குறிப்பிடலாம்,
இவ்வாறு தாக்குதல் நாடாத்தியவர்களின் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கையினை தடுக்கும் நடவடிக்கையாகும். அவர்கள் இந்த நிலங்களை இராணுவ மயமாக்கி வைத்திருப்பதுடன் பெளத்த மயமாக்கலையும் மேற்கொள்ளுகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியதுடன், சுயநிர்ணய உரிமை தத்துவவியல் அடிப்படையில் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆழ வேண்டும் என்ற உணர்வோடு வாழ நினைக்கும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்பதைதான் நேற்றைய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகிறது.
இதற்கு எதிராக தந்தை செல்வா எந்த இலட்சியத்திற்காக போராடினாரோ, எந்த இலட்சியத்தை விட்டுச் சென்றாரோ, எத்தனை ஆயிரம் உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளன, இலட்சியத்திற்காக ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்திருக்கின்றார்கள் இவற்றை எல்லாம் அரசாங்கம் பொருட்படுத்தாமல், இது ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது, இது ஒரு சர்வாதிகார நாடு என அவர் குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக நாட்டின் சர்வதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அவர்களுடைய செயற்பாடுகள் தான் இங்கு முழுமையாக இடம்பெறுகின்றது
எனவே தந்தை செல்வா இலட்சியத்திற்காக தன்னை அர்ப்பணித்தாரோ அவரின் இலட்சியத்தில் தொடர்ந்து பயணிப்போம் என அவர் தெரிவித்தார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணை நடத்த வேண்டும்!- தமிழ் கூட்டமைப்பு
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 12:09.25 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊடான விசாரணைப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சிறிதரன் அவர்களது அறிவகம் அலுவலகம் தாக்கப்பட்ட செய்தியை அறிகின்றோம்.
கொழும்பில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
இலங்கையில் உச்சகட்ட போர் நடைபெற்ற வேளையிலும், அதற்கு பின்னரும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர்.
போருக்கு பின்னர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பலர் எங்கே இருக்கிறார்கள்? என்பது இதுவரை தெரியவில்லை.
காணாமல் போனவர்களின் பெற்றோரும், உறவினர்களும் இதற்கான பதிலை எதிர்பார்க்கின்றனர்.
போரின் போது 5 ஆயிரம் முதல் 7 ஆயிரத்திற்குட்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறுகிறது.
ஆனால், 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக பொது பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழீழ மக்கள் பேரவை தன் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது!
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 12:46.03 AM GMT ]
30ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் சந்திப்பு ஒன்றை நடாத்திக் கொண்டிருந்த போதே சிங்கள கொடியுடன் வந்த காடையர்கள் மக்களை தாக்கி இருக்கிறார்கள்.
இவ்வாறான தாக்குதல் மேற்கொள்ளப்படுவதும் அதனூடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதும் இது முதல் முறையானதாகவோ அல்லது இறுதியானதாகவோ இருக்கப் போவதும் இல்லை என்பதையும் நாம் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளோம்.
கடந்த காலங்களைப் போன்றே சிறிலங்கா அரசின் நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள் குற்றவாளிகளை தாங்களே மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைப்பதும் அவர்கள் குற்றவாளிகளை பாதுகாத்து விடுவிப்பதும் சிறிலங்காவைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்க முடியாததொன்று.
இவ்வாறான அரச பயங்கரவாத நடவடிக்கைகளின் பின்னால் அரச ஆதரவுக் கும்பலும், ஆயுதந் தரித்த இராணுவக் குண்டர்களும், புலன்னாய்வாளர் என்று சொல்லப்படும் கொலையாளிகளுமே உள்ளனர் என்பதை இச்சம்பவம் அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கே மரண அச்சுறுத்தல் விடுக்கப்படும் ஒரு தேசத்தில் சாதாரண மக்களின் உயிருக்கு என்ன உத்தரவாதம் இருக்கமுடியும்? சுயாதீனமாக இயக்கவேண்டிய நீதித்துறையே தன் விருப்பம் போல் பந்தாடுகின்ற சிறிலங்கா அரசிடம் இருந்து நீதியைத்தான் எதிர்பார்க்க முடியுமா?
சிறிலங்காவுக்கு சர்வதேசம் கொடுத்துள்ள வாய்ப்புக்களை அது ஒரு போதும் நேர்மையான வழிகளில் பயன்படுத்தப் போவதில்லை. இலங்கைத்தீவில் சிங்கள மக்கள் தவிர்ந்த ஏனைய சமூகங்களின் இருத்தலுக்கு அது அச்சுறுத்தலாகவே தொடர்ந்தும் இருக்கப் போகின்றது.
அதன் தொடர்ச்சியாகவே இஸ்லாமிய சகோதர்கள் மீதான தாக்குதல்கள் அவர்களது வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்களையும் நாம் பார்க்க முடிகின்றது.
இவ்வாறான சனநாயகத்துக்கு புறம்பானதும் நீதீக்கு புறம்பானதுமான அனைத்து அரச பயங்கரவாத நடவடிக்கைகளையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அதே நேரத்தில் இந்த விடயத்தில் நாம் பிரான்சு மற்றும் 22ம் மனிதவுரிமை சபையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக பரிந்துரையை முன்மொழிந்த நாடுகளிடமும், இன்று தொடர்ச்சியாக நடைபெறும் அரச பயங்கரவாத்தை எடுத்து செல்கிறோம்.
- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு
Geen opmerkingen:
Een reactie posten