தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 april 2013

தமிழ் ஈழ விடுதலைக்கான மருத்துவர்கள் உண்ணாவிரதம்!


தமிழ் ஈழ விடுதலைக்கான மருத்துவர்கள், இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டனர்.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித தீர்வையும் முன்வைக்காததால், அதை எதிர்க்கிறோம். இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்க்குற்றமோ, மனித உரிமை மீறலோ மட்டுமல்ல அது திட்டமிட்ட இனப்படுகொலை.

தமிழக மாணவர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்களை கூட்டாச்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். சிங்கள இனவெறி அரசின் துணை தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் வெளியேற்ற வேண்டும். இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் இந்திய அரசு துண்டிக்க வேண்டும்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். உலக தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத்துறையை உருவாக்க வேண்டும். ஆசிய நாடுகள் எதுவும் சர்வதேச விசாரணை குழுவில் இடம்பெறக் கூடாது.

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்தில் இருந்து எந்த வரியையும் செலுத்த மாட்டோம். இவ்வாறு உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten