தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

இன்றும் நட்டாற்றில் பயணிகளுடன் தத்தளித்த இயந்திரப் படகு! மட்டு. மண்முனையில் சம்பவம்!


'கண் பார்வை இருப்பதற்குள், எனக்கு சக்தி இருப்பதற்குள் என் மகனைத் திரும்பக் கொடுங்கள்"!- பேரறிவாளனின் தாய் கதறல்
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 05:19.55 PM GMT ]
“எனக்கு கண் பார்வை இருப்பதற்குள், என் உடம்பில் சக்தி இருப்பதற்குள் என் மகனைத் திரும்பக் கொடுங்கள். அவன் வாழ வேண்டியவன்” என ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த தாயின் கண்ணீரோடு கலந்த வார்த்தைகள் சில...
“எனக்கு பேரறிவாளன் ஒரே மகன். இரண்டு பெண்கள். மூவரும் நல்லா படிப்பாங்க. மற்றவர்கள் முகம் சுளிக்கக் கூடாது என்ற மன நிலைதான் எனது மகனுக்கு சிறிய வயதிலிருந்து இருந்தது.
1991 ஜுன் 10ம் திகதி இரவு எங்க வீட்டுக் கதவை சிபிஐ எல்லாம் வந்து தட்டினாங்கள். ஏதேதோ தேடினாங்க.
முதல்ல வந்தவர்களில் ஒருவர் தொலைக்காட்சிப் பெட்டி மேல இருந்த தம்பி பிரபாகரனின் போட்டோவை எடுத்து இன்னுமொருவரிடம் காட்டினார். கூட வந்த கங்காதரன் என்ற சிபிஐ அதிகாரி அதை அப்படியே வைக்குமாறு கூறினார்.
அதுக்கு பின்னர் குடும்ப விபரம் எல்லாவற்றையும் விசாரித்தார்கள். மகனைப் பற்றி கேள்வி கேட்டார்கள்.  மேல் படிப்பிற்றகாக சென்னையில் தங்கியிருக்கார் என்று கூறினேன்.
அவரையும் விசாரிக்க வேண்டும் பின்னர் மல்லிகை என்ற இடத்திற்கு மகனை அழைத்து வரச் செல்லியிருந்தார்கள்.
நானும் அழைத்துப் போனேன். விசாரித்து விட்டு விடுவதாக அனுப்புவதைக் சொன்னார்கள். நானும் மறுநாள் மகனைப் பார்க்கச் சென்றேன். மகனை பார்க்க விடவில்லை. வக்கீலை பார்க்க சொன்னார்கள். நான் கொண்டு சென்ற துணியை மட்டும் வாங்கி எடுத்தார்கள்.
பின்னர் 8 நாளைக்கு பின்னர் பேரறிவாளனை தேடி வலை வீசிப் பிடித்ததாக செய்தித்தாளில் வந்திருந்தது. எங்களுக்கு பயமாக இருந்தது.
எப்போது விசாரித்து அனுப்புவதாக அழைத்துச் சென்றார்களோ அன்றிலிருந்த கண்ணீரோ அலைந்து திரிகின்றேன்.
தனியாக எங்குமே போகாத நான். இப்போது எனது பையனுக்காக.... என்று வாய் விட்டு கதறியழுகிறார்...

இன்றும் நட்டாற்றில் பயணிகளுடன் தத்தளித்த இயந்திரப் படகு! மட்டு. மண்முனையில் சம்பவம்!
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 07:43.38 AM GMT ]
மட்டக்களப்பு மாவடத்தின் மண்முனை ஓடத்துறையினால் பயணிக்கும் பிரயாணிகள் தினமும் நட்டாற்றில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான போக்குவத்து மார்க்கங்களில் மிகப் பிரதானமான ஒன்றாகக் காணப்படும் மண்முனை ஓடத்துறையில் இரண்டு இயந்திரப் படகுகளை மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை விடப்பட்டுள்ள போதிலும் அவற்றுள் ஒரு இயந்திரப்படகு மிக நீண்ட காலமாக பழுதடைந்துள்ளது.
தற்போது ஒரு இயந்திரப் படகு மாத்திரமே சேவையிலீடுபடுகின்றது.
தற்போது சேவையிலீடுபடும் இயந்திரப் படகும் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆற்றைக் கடந்து செல்லும் போது நடு ஆற்றினுள் வைத்து பழுதடைகின்றது.. பின்னர் பலத்த போராட்டத்தின் மத்தியில் இயந்திரத்தினை திருத்திய பின்பே ஆற்றினைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் மணிக்கணக்கில் மண்முனை நடு ஆற்றிற்குள் பாதையில் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்றும்கூட (22.04.2013) காலை இவ்வாறு பயணிகளை ஏற்றிக் கொண்டு இயந்திரப் படகு சென்று கொண்டிருந்த வேளை நடு ஆற்றில் இயந்திரம் பழுதடைந்து இரண்டு மணித்தியாலங்கள் பயணிகள் நடு ஆற்றில் கொளுத்தும் வெயிலில் கிடந்து மறுகரை வந்து சேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனினும் எது எவ்வாறு அமைந்தாலும் பழுதடைந்து கிடக்கும் மற்றைய பாதையினை இதுவரை வீதி அபிவிருத்தி அதிகார சபை திருத்தி சேவையில் ஈடுபடுத்தாமல் இருப்பது ஏன் என தொரியாதுள்ளது என பிரயாணிகள் வினா எழுப்புகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten