தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 april 2013

இலங்கை தயாரித்துள்ள புது சர்வதேச பிடியாணை [இன்ரர் போல்]


லண்டனில் விசேட கூட்டம்: காமன் வெலத் கூட்டம் எங்கு நடத்துவது ?
21 April, 2013 by admin
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில்ழ பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை நடாத்துவது குறித்து லண்டனில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டனில் பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டில் இலங்கையில் அமர்வுகளை நடாத்துவது குறித்த முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

அமர்வுகளை வேறும் நாட்டில் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடாத்துவது நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை.எனினும், இந்த அமர்வுகளை இலங்கையில் நடாத்துவதா இல்லையா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.வேறும் விடயங்கள் என்ற வகையீட்டுக்குள் இலங்கை அமர்வு குறித்து கலந்தாலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறெனினும், இலங்கையில் அமர்வுகளை நடாத்தக் கூடாது என இதுவரையில் எந்தவொரு நாடும் உத்தியோகபூர்வமாக கோரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தயாரித்துள்ள புது சர்வதேச பிடியாணை [இன்ரர் போல்]
21 April, 2013 by admin
பயங்கரவாத செயல் மற்றும் போலி காணி உரிமை சான்றிதழ்களை தயாரித்த உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 பேரை கைதுசெய்வதற்காக இலங்கை அரசானது சர்வதேச காவற்துறையான இண்டர்போல் ஊடாக பிடியாணைகளைப் பிறப்பித்துள்ளது. இவர்களில், சிங்கள, தமிழ், முஸ்லிம் தரப்பினர் அடங்குகின்றனர். இவர்களில் ஒருவர் சட்டத்தரணி எனவும் , அத்துடன் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட ஆறு பேரும் உள்ளடங்குவதாக அதிர்வு இணையம் அறிகிறது.

புலிகளுக்கு நிதி சேரித்ததாகச் சொல்லப்படும் ரெஜி, புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சிவராசா போன்றவர்களையும் கைதுசெய்யுமாறு இலங்கை இன்ரர் போலிடம் கோரியுள்ளது. 36 பெயருடைய முழுப் பட்டியலும் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன் சிலிங்கோ நிறுவனத்தின் தலைவரின் மனைவியை கைதுசெய்வதற்காகவும் சர்வதேச பொலிசாரின் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளது என மேலும் அறியப்படுகிறது.



Geen opmerkingen:

Een reactie posten