தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 17 februari 2013

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள்


இலங்கையின் குருநாகல் பிரதேசத்தில் சுமார் 50 முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஏதிர்வரும் மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் முஸ்லிம்கள் பிரதேசத்தில் உள்ள தமது கடைகளை மூடிவிட வேண்டும் என்று அந்த கடிதங்களில் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவங்கள் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தப்படாவிட்டால், 1983 கலவரங்கள் போன்ற ஒரு நிலையை தவிர்க்க முடியாது என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் ஹலால் பிரச்சினை தொடர்பில் தாம் ஜாதிக ஹெல உறுமய மற்றும் பொதுபல சேனா ஆகிய அமைப்புக்களை சந்திக்கவுள்ளதாகவும் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்

Geen opmerkingen:

Een reactie posten