தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 februari 2013

சிறிலங்கா தொடர்பில் பிரித்தானியாவின் இரட்டை முகம் அம்பலம்?


சிறிலங்கா தொடர்பில் பிரித்தானியாவின் இரட்டை முகம் அம்பலம்?

பிரித்தானியா தொடர்ந்தும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக பிரித்தானியாவின் ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் சுமார் இரண்டு மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானியா, சிறிலங்காவுக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் புள்ளி விபரத் தரவுத் தளத்திலிருந்து இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மொத்தமாக, 600 தாக்குதல் துப்பாக்கிகள், 650 துப்பாக்கிகள், 100 கைத்துப்பாக்கிகள், 50 தாக்குதல் சொட் கண்கள், என்பனவற்றை விற்க பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் சிறிலங்காவுக்கு 330,000 பவுண்ட்ஸ் பெறுமதியான வெடிபொருட்களையும், 665,000 பவுண்ட்ஸ் பெறுமதியான குண்டு துளைக்காத உடற்கவசங்களையும் விற்கவும்,அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2008 தொடக்கம் 2012 ஜுன் வரையில், சிறிலங்காவுக்கு 12 மில்லியன் பவுண்டஸ் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசமான மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவுக்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதை கண்டிக்கும் வகையிலும், சிறிலங்காவின் மோசமான மீறல்களை விபரித்தும் ‘இன்டிபென்டென்ட்‘ நாளேடு தனது இன்றைய விரிவான தலைப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது.
மனித உரிமை நிலைமைகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டு வரும் சிறிலங்காவுக்கு பாரியளவில் ஆயுதங்களை பிரித்தானியா விற்பனை செய்துள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தனிப்பட்ட ரீதியில் அனுமதிப்பத்திர உரிமையாளர்களின் ஆயுத விற்பனை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும், ஆயுத விற்பனையின் போது மனித உரிமை நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கவனத்திற் கொண்டே பிரித்தானிய அரசாங்கம் ஆயுதங்களை விற்பனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://asrilanka.com/2013/02/18/14790


பிரித்தானியா இலங்கைக்கு ஆயுத விற்பனை! இன்டிபென்டன்ட் செய்தியை மறுக்கும் இலங்கை இராணுவம்
[ திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013, 02:49.49 PM GMT ]
பிரித்தானியாவிடம் இருந்து முப்பது லட்சம் ஸ்ரேலின் பவுண்ஸ் பெறுமதியான, ஆயுதங்களை இலங்கை கடந்த வருடம் கொள்வனவு செய்ததாக பிரித்தானியாவின் இன்டிபென்டன்ட் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.
இன்டிபென்டன்ட் செய்தித்தாளின் தகவல் பற்றி இராணுவ ஊடக பேச்சாளர் ரூவான் வணிகசூரியாவிடம் வினவிய போது அதனை அவர் அந்த செய்தியை மறுத்துள்ளார்.
கடந்த வருடம் பிரித்தானியாவிடம் இருந்தோ அல்லது எவரிடமும் இருந்தோ ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படவில்லை என குறிப்பிட்டார்.
இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டிற்காக இந்த ஆயுதங்கள் வாங்கப்பட்டதாக இன்டிபென்டன்ட் தெரிவித்திருந்தது.
இலகு ரக ஆயுதங்கள், கைக்குண்டுகள் மற்றும் தொலைத் தொடர்பு உபகரணங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த கொள்வனவு தொடர்பான தகவல்கள் பிரித்தானிய அரசின் தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டதாக இன்டிபென்டன்ட் செய்தித் தாள் சுட்டிக்காட்டியிருந்தது.
இலங்கையை பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சு மனித உரிமைகள் தொடர்பான பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.
சில செயல்பாடுகள் காரணமாக இலங்கையின் மனித உரிமை நடவடிக்கைகள் திருப்திகரமாக அமையவில்லை என அந்த பட்டியலின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரித்தானிய அரசு ஆயுத கொள்வனவு தொடர்பாக ஏற்கனவே பூரண ஆய்வினை மேற்கொண்டதாகவும் அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்புபட்ட செய்தி

Geen opmerkingen:

Een reactie posten