சென்னையில் உள்ள ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது மர்ம நபர்கள் இன்று (20) காலை தாக்குதல் நடத்தியுள்ளனர். சென்னை கோடம்பாக்கம் – நுங்கம்பாக்கம் சாலையில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென கற்களை வீசி தாக்கினர். இதில் அலுவலக கண்ணாடி பலத்த சேதமடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொள்ளப்பட்ட புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் சென்னையில் உள்ள இலங்கை வங்கிக் கிளை தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten