தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 februari 2013

கே பியின் கைது, இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய வெற்றி!- விக்கிலீக்ஸில் பாலித கோஹனவின் கருத்து


கே.பி என்ற குமரன் பத்மநாதனை கைது செய்தமையானது விடுதலைப் புலிகளின் முடிவாக கருதப்படுவதாக இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் இதனை வோசிங்டனுக்கு தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கே பி என்ற குமரன் பத்மநாதன், சர்வதேச ரீதியாக இயங்கிவரும் விடுதலைப் புலிகளின் தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். அவரே விடுதலைப் புலிகளின் நிலைகளை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
எனவே அவரை கைது செய்தமையானது, இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய வெற்றியாகும் என்று பாலித கோஹன குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கே பியின் கைது, விடுதலைப் புலிகளின் மீள்எழுச்சிக்கு தடங்கலை ஏற்படுத்தும் என்றும் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
பாலித கோஹனவின் இந்த கருத்துக்களை அமெரிக்க தூதரகம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் திகதியன்று வோசிங்டனுக்கு அறிவித்துள்ளது

Geen opmerkingen:

Een reactie posten