தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 februari 2013

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்


ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகளில் வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை இந்த விளக்கமளிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவிததுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் வெளிநாடுகளுக்கான இலங்கையின் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
இதேவேளை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டுள்ள விதம், மற்றும் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவுள்ள பரிந்துரைகள் தொடர்பிலும் தகவல் வழங்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் என நேற்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் உள்ளடக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ள விடயங்கள் குறித்த ஆவணத்தில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் உள்ளடக்கப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவிப்பதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten