தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 16 februari 2013

வலி வடக்கில் இராணுவத்தை நையப்புடைந்த பொதுமக்கள் !





இன்று(15) வலி வடக்கில், உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை அகற்றுமாறு கோரி, யாழ். தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எற்பாட்டில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் மாவை சேனாதிராசா, மனோகனேஷன், ரணில் விக்கிரமசிங்க, விக்கிரமபாகு கருணாரட்ன, என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இன்றும் சிங்கள சிலவேளை தம்மீது தாக்குகுதல் நடைபெறலாம் என்று தமிழர்கள், மிகவும் அவதானமாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணியதுபோலவே, சில சிங்கள புலனாய்வுப் பிரிவினர், அவ்விடத்துக்கு வந்து தமிழர்களை தாக்கியுள்ளார்கள். ஆனால் வழமைபோல தமிழர்கள் எழுந்து ஓடவில்லை ! அங்கே நின்ற தமிழர்கள் ஒன்றினைந்து, சிங்கள இளைஞர்களை மடக்கிப் பிடித்து முதலில் நையப்புடைந்துள்ளார்கள்.

பின்னர் அச் சிங்களவர்களைப், பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இங்குள்ள காணொளியில், நீல நிற ரீ- சேட்டுடன் பொலிசாரால் அழைத்துச் செல்லப்படுபவர், ஒரு சிங்களவர் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடையம் நினைவில் இருக்கலாம். 1956ம் ஆண்டு, தமிழர்கள் பாராளுமன்றம் முன்பாக அமிர்தலிங்கம் தலைமையில் இதுபோன்றதொரு ஒரு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் சிங்கள காடையர்கள் அங்கே புகுந்து அவர்களை அடித்தார்கள். அப்போது அடிவாங்கிய அமிர்தலிங்கம் அவர்கள், விம்மி விம்மி அழுதவாறு, மக்களே இங்கிருந்து சென்றுவிடுங்கள் ! கலைந்து போங்கள் என்று கூறினார். பின்னர் அவர் எழுந்து பாராளுமன்றத்துக்கு உள்ளே சென்றவேளை, அவரைப் பார்த்து சிரித்த சிங்களத் தலைவர்கள், ... இதோ தளபதி வருகிறார் என்று சொல்லி பரிகாசம் செய்தார்கள். அது அன்று ! ஆனால் இன்று வலி-வடக்கு மக்கள் சிங்கள காடையர்களை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள் இது இன்று நடந்தது !

இவை அனைத்துக்கும் காரணம் தமிழ் மக்களிடையே தோன்றிய விடுதலைப் புலிகள் என்னும் சக்திதான் ! எமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வழிகாட்டல் தான் ! ... என்பதனை எவரும் மறுத்துவிடமுடியாது !

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான்.



Geen opmerkingen:

Een reactie posten