தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 februari 2013

தமிழீழ தேசியத்தலைவரின் இளைய மகன் கோரப் படுகொலை! அப்பட்டமான இலங்கையின் போர்க்குற்றம் அம்பலம்!


தமிழீழ தேசியத்தலைவரின் இளைய மகன் கோரப் படுகொலை! அப்பட்டமான இலங்கையின் போர்க்குற்றம் அம்பலம்!
[ செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013, 07:09.57 AM GMT ]
தமிழீழ மண்ணில் இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த கொலைகாரன் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கோர முகத்தை அம்பலப்படுத்துகிற வகையில் தமிழ் நெஞ்சங்களை பதற வைக்கக் கூடிய இன்னொரு இனப்படுகொலை சாட்சி அம்பலமாகியிருக்கிறது..
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இளைய மகன் 12 வயதே ஆன பாலகன் பாலச்சந்திரன், போரின் போதே கொல்லப்பட்டார் என்ற சிங்களக் கொலை வெறியன் ராஜபக்சேவின் கோயபல்ஸ் பிரச்சாரம் தற்போது சர்வதேச அரங்கத்தில் அம்பலமாகிவிட்டது.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் கூட உள்ள நிலையில் இங்கிலாந்தில் இருந்து வெளியாகக் கூடிய தி இன்டிபென்டெட் நாளேடு, சனல் 4 தொலைக்காட்சி ஆகியவை பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட உண்மையான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் புதல்வன் பாலகன் பாலச்சந்திரன் உயிரோடு சிங்களக் காடையர்களால் கைது செய்யப்பட்டு அவர்களது ராணுவ முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்ட காட்சி இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
உயிரோடு கைது செய்யப்பட்ட பாலகன் பாலச்சந்திரனை தங்களது முகாம்களில் வைத்தே அப்பட்டமாக படுகொலை செய்திருக்கிறது என்ற புககைப்படக் காட்சிகள் தமிழர் நெஞ்சங்களை சொல்லொண்ணாத் துயரில் ஆழ்த்துகிறது.
இத்தகைய கோரப் படுகொலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இலங்கை சிங்கள கொலைகார அரசை நேச சக்தியாகவே இந்திய அரசு இன்னமும் கருதுகிறது எனில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியாவை `எதிரி' நாடாகத்தானே கருத வேண்டியிருக்கும்
இதன் பின்னராவது இலங்கையுடனான பொருளாதார உறவுகளை இந்திய அரசே துண்டித்துக் கொள்!
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்ற குரலை இந்திய அரசே அங்கீகரி!
மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் சிங்கள காடையரின் ராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்காதே!
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளையின் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும்!
தமிழீழப் பகுதிகளில் பன்னாட்டுப் படைகளை நிறுத்தி சுதந்திரமான பொதுவாக்கெடுப்பு நடத்திட இந்திய அரசு முன் முயற்சிகளை எடுக்க வேண்டும்! என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தி. வேல்முருகன்,
நிறுவனர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி

உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? பிரபாகரன் மகன் படுகொலை குறித்து வைகோ ஆதங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013, 07:46.24 AM GMT ]
இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாலச்சந்திரனின் கொடூரக் கொலை குறித்து ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஜெர்மனிய நாஜிகள் நடத்திய படுகொலைகளை விட, சிங்களவன் செய்த தமிழ் இனக்கொலைகள், அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த பின்னும், இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாலச்சந்திரனின் கொடூரக் கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நம் இருதயங்களை வெட்டிப் பிளக்கும் துன்பச் செய்தியாக, தமிழ் ஈழ தேசியத் தலைவர், தமிழ்க்குலத்தின் தவப்புதல்வன், மேதகு பிரபாகரன் அவர்களின் இளைய மகன், 12 வயதே நிரம்பிய பாலச்சந்திரன், சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட கோரச் சம்பவத்தை, வீடியோ ஆதாரத்தோடு சனல் 4 வெளியிட்டு உள்ளது.
ஐந்து குண்டுகள் பாலச்சந்திரன் மார்பிலே பாய்ந்து உள்ளன. சண்டை நடந்தபோது, இருதரப்பிலும் குண்டுகள் பாய்ந்தபோது ஏற்பட்ட சம்பவம் அல்ல.
இதயம் வெடிக்கிறது
சின்னஞ்சிறு பிள்ளையான பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு, மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ள ஒரு நிலவறைக்கு உள்ளே உட்கார்ந்து இருக்கிறார். அரைக்கால் சட்டை அணிந்து இருக்கிறார்.
கருப்பு சட்டை இடுப்பில் சுற்றப்பட்டு உள்ளது. தோள்களில் ஒரு பழைய லுங்கி, அப்பிள்ளையின் பால்வடியும் முகம், சின்னஞ்சிறு மார்பு, ஒரு படத்தில் கையில் ஏதோ பிஸ்கட்டோ ஒன்றையோ வாயில் உதடுகளில் வைப்பதுபோல் தோற்றம்.
அடுத்தபடத்தில் அந்த ஒளி தரும் கண்கள் எதையோ உற்று நோக்கும் பார்வை. ஐயோ, அதைப் பார்க்கும் போதே இதயம் வெடிக்கிறதே!
மூன்று அடி இடைவெளியில் கொலை
அடுத்தபடம். உயிரற்ற சடலமாகக் கிடக்கிறான் பிள்ளை. ஐந்து குண்டுகள் மார்பில் பாய்ந்து உள்ள அடையாளம். இதுகுறித்து, ஆய்வு செய்த நிபுணர் கூறுகிறார் மூன்று அடி இடைவெளியில் இருந்துதான் முதல் குண்டைச் சுட்டு இருக்க வேண்டும்.
அந்தத் துப்பாக்கியை நோக்கி பாலச்சந்திரன் கையை நீட்டித் தொட முயன்று இருக்கலாம். முதல் குண்டு பாய்ந்தவுடன் பின்புறமாக விழுந்துவிட்டான். அதன் பிறகு நான்கு ரவைகள் மார்பிலே பாய்ந்து உள்ளன.
உண்மையான தடயம்
தடவியல் துறையில் உலகப் புகழ்பெற்ற நிபுணர், பேராசிரியர் டெரிக் பவுண்டர், "இது நூற்றுக்கு நூறு உண்மையான தடயம்" என்று உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
பாலச்சந்திரன் கண்முன்னாலேயே ஐந்து தமிழர்களைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் பாலச்சந்திரனையும் சிங்கள இராணுவத்தினர் படுகொலை செய்தனர் என்பது, அணு அளவு ஐயத்துக்கும் இடம் இன்றி உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று, சனல் 4 தொலைக்காட்சியின் காணொளிக்காட்சிகள் சாட்சியம் தருகின்றன.
திட்டமிட்ட படுகொலை
கிடைத்து இருக்கக்கூடிய வீடியோ ஆதாரங்களின்படி, சிங்கள இராணுவ அதிகாரிகள் அங்கே இருந்து உள்ளனர். அந்த இரணுவத்தினர் வசம் உள்ள வீடியோ ஆதாரத்தின்படி, பாலச்சந்திரன் சடலம் கிடந்த இடத்திற்குப் பக்கத்தில், வேறு ஐந்து பேரின் சடலங்களும் கிடக்கின்றன.
அவர்கள் விடுதலைப்புலி போராளிகளாகத் தெரிகிறது. அவர்களது உடைகளைக் களைந்து அம்மணமாக்கி, கைகளையும், கண்களையும் கட்டி, உச்சந்தலையில் சுட்டுக் கொன்று இருக்கின்றார்கள். இது திட்டமிட்ட கோரப் படுகொலை ஆகும்.
எத்தனை சிறுவர்கள்?
ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளைவிட, சிங்களவன் செய்த தமிழ் இனக்கொலைகள், அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றிக் கொன்றுகுவித்த பின்னும், இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் சிங்களவனால் கொல்லப்பட்டனர்?
அனைத்துலக விசாரணை தேவை
எனவே, இந்தக் கோரமான கொலைகளுக்கு மகிந்த ராஜபக்சவும், அவனது கொலைகார சகோதரர்களும் இரணுவத்தின் தலைமைத் தளபதிகளும் சிங்கள அரசுமே குற்றவாளிகள் ஆவார்கள்.
அதனால்தான், தமிழ் இனக்கொலை குறித்து சிங்கள் அரசு மீது, அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்று கேட்கிறோம். ஜெனிவா மனித உரிமை கவுன்சில் அத்தகைய முடிவை அறிவிக்க வேண்டும் என்று உலகத்தின் மனசாட்சியின் கதவைத் தட்டுகிறோம்.
பார்வதி அம்மாள் நினைவு தினம்
பிரபாகரன் அவர்களின் தந்தையார் வேலுப்பிள்ளை அவர்களை, சிங்கள இராணுவ முகாமில் துன்புறுத்தி, 2010 ஜனவரி 7 இல் சாகடித்தார்கள். அன்னை பார்வதி அம்மையார் அவர்கள் சிகிச்சை பெற வந்தபோது, இந்திய அரசு, அன்றைய மாநில திமுக அரசு தமிழகத்துக்கு உள்ளேயே நுழைய விடாமல் கருணை இன்றி விரட்டி அடித்தது.
2011 பெப்ரவரி 20ல் யாழ்ப்பாணத்தில், அன்னை பார்வதி அம்மாள் உயிர் நீத்தபின், அத்தாயின் சடலம் எரியூட்டப்பட்ட போது, மூன்று தெருநாய்களை சிங்கள இராணுத்தினர் சுட்டு, அச்சிதையில் வீசிய கொடுமை நடந்தது.
சிங்களவனைக் கூண்டில் ஏற்றுவோம்
முத்துக்குமார், முருகதாசன் உள்ளிட்ட 19 தமிழர்கள் உயிரையும் உடலையும் எரித்த நெருப்பின் பெயரால் உலக மக்களிடம் நீதி கேட்கிறோம்.
தாய்த் தமிழகத்து மக்களே, இளம் தலைமுறையினரே, இதயத்தில் குருதியைக் கொட்டும் இக்கொடுமைகளை எண்ணிக் கொதித்து எழுவோம்.
மிருகங்களைவிடக் கொடிய சிங்களவனைக் கூண்டில் ஏற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும்... மீண்டும் சிலுவையில் அறையப்படும் ஈழத் தமிழினம்!
[ செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013, 12:57.00 AM GMT ]
ஒரு கோரமான காட்சி... நெஞ்சைப் பிழியவைக்கும் சிங்களக் கொடூரம்... இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு இனமா? என்று உலகம் எங்கும் கேள்வி எழுப்பப்படுவதற்குச் சாட்சியாக மீண்டும் வெளிவந்துள்ளது தேசியத் தலைவர் அவர்களது மகன் சிங்கள படைகளால் பிடிக்கப்பட்டு, இரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்படும் காட்சி...
முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில், சிங்கள்ப் படைகளால் தேசியத் தலைவர் அவர்களது மகனின் உடலத்தைக் காண்பிக்கப்பட்டபோதே, அது குறித்த சர்ச்சைகளும், கேள்விகளும் உருவாகிவிட்டது. கடந்த வருடத்தில், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட 'கொலைக் களங்கள்' ஆவணப் படத்தில், பாலச்சந்திரனின் மரணம் குறித்து ஆராயப்பட்டது.
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்திற்குக் கிடைக்கப் பெற்ற படங்களையும் ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் Professor Derrick Pounder உடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து பாலச்சந்திரன் மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்திருந்தார்.
துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த திசையையும் குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்திருந்ததுடன், அந்தப் ப்ற்களின் உண்மைத் தன்மையையும் உறுதிப்படுத்தியிருந்தார்.
தற்போது, கிடைக்கப்பெற்றுள்ள நான்கு புதிய டிஜிட்டல் படங்களும் ஒரேநாளில், ஒரே புகைப்படக் கருவி மூலம் எடுக்பட்டிருப்பதை புகைப்பட ஆதாரங்களை அராய்ந்தறியும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதில் இரண்டு படங்கள் பாலச்சந்திரன் உயிருடன் இருப்பதையும் இரண்டு படங்கள் அவர் கொல்லப்பட்டிருப்பதையும் பதிவு செய்துள்ளது.
இந்தப் புகைப்படங்கள், சிங்களப் படையினரும், ஆட்சியாளர்களும் மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்ப்பதற்காக ஆவணப்படுத்தப்படடிருந்த தமிழினப் படுகொலைக் காட்சித் தொகுப்பிலிருந்து, புதிய தகவல் தொழில் நுட்பத்தால் கைப்பற்றப்பட்டு, வெளிவந்ததுள்ளன. இவற்றை The Independent  பத்திரிகை தற்போது உலகின் கவனத்திற்கு எடுத்து வந்துள்ளது.
இலங்கைத் தீவில், சாட்சிகளற்ற போர் மூலம் சிங்கள அரசு நடாத்திய இனப் படுகொலைக் காட்சிகளின் தொகுப்பாக, பல புதிய கொடூரக் காட்சிகளுடன் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் மற்றுமொரு ஆவணப் படத்தைத் தயாரித்துள்ள நிலையில், தேசியத் தலைவர் அவர்களது இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலைக் காட்சிகளும் வெளிவந்துள்ளன.
கண்கள் நீர் சொரிய... கனத்த இதயங்களுடன் தமிழினம் வலிகொண்டு அழுகின்றது... உலக நாடுகள் மௌமாக அஞ்சலி செலுத்துகின்றன. காந்தி தேசம் கழுவ முடியாத இரத்தக் கறை படிந்த தன் கைகளை மீண்டும் ஒருமுறை துடைத்துக்கொள்கின்றது...
எங்கள் தேசத்தின் தலைமகன் பெற்றெடுத்த ஒரே காரணத்திற்காக அந்தப் பச்சிளம் பாலகன் வேள்விக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆட்டினைப்போல், சிங்கள இனவாதப் படையினரால் கொண்டு செல்லப்பட்டு, அவன் கொறிப்பதற்கும் சில தீனிகள் வழங்கப்பட்டு, கொரூரமாகச் சுட்டுக் கொல்லப்படுகின்றான்...
இந்தக் காட்டுமிராண்டித்தனமான கொடூரத்தை சிங்களவனைத் தவிர வேறு யாரும் இந்த உலகில் நடாத்தத் துணியமாட்டார்கள். எங்கள் தேசத்தின் அவலங்களுக்கான மொத்தச் சாட்சியாக 12 வயதேயான பாலகன் பாலச்சந்திரனின் படுகொலைக் காட்சி மனதைச் சுட்டெரிக்கின்றது.
இந்த உலகில் மனிதத்தைத் தொலைக்காத மனிதர்கள் இருப்பார்களாக இருந்தால், இந்த ஒரு காரணம் போதும் ஈழத் தமிழர்கள் விடுதலை அடைய. நாகரிகம் அடைய மறுக்கும் சிங்கள இனத்துடன் தமிழர்கள் இனிமேலும் இணைந்து வாழ்வது என்பது சாத்தியம் தானா?
ஏ... சர்வதேசமே! எங்களுக்கு நீதி வழங்கு...! ஏ... பிரித்தானியாவே! எங்களிடமிருந்து பறித்த எங்கள் நிலத்தை எங்களிடம் மீட்டுத் தந்துவிடு...! ஏ... காந்தி தேசமே! ஈழத் தமிழர்களை இனியாவது வாழவிடு...! என்று அத்தனை தமிழர்களும் ஓங்கிக் குரல் எழுப்புகின்றார்கள்.
சிங்கள தேசத்தில் நீதி இல்லை... சிங்களவன் எவன் நெஞ்சிலும் ஈரம் இல்லை... இல்லையென்றால், இத்தனை கொடூரங்களையும் நடாத்தியவன் பின்னாலே, வெற்றிக் கொடி கொண்டு பின்னாலே செல்வானா...? மனிதன் என்ற சொல்லுக்குத் தகுதியற்ற இனத்தின் குறியீடாகவே சிங்களம் தகுதி பெற்றுள்ளது. எங்கள் தேசத்தில் வழிந்த குருதி கொண்டு பால் பொங்கல் செய்து கொண்டாடுகின்றது சிங்கள இனவாதம். எங்கே செல்வது நாம்? யாரிடம் கேட்பது எமக்கான நீதியை?
பொங்கி எழு தமிழா... புறப்படு ஜெனிவா போர்க் களத்திற்கு... அங்கே கூடும் அனைத்துலகத்திடமும் ஓங்கிக் குரல் எழுப்பி ஒற்றுமையாகக் கேட்போம், எமக்கான தேசத்தை... எங்கள் தமிழ் ஈழத்தை!
- இசைப்பிரியா
http://news.lankasri.com/show-RUmryCSdNXhv4.html

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்கள் உண்மையானவையல்ல!- இராணுவப் பேச்சாளர் மறுப்பு
[ செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013, 07:31.06 AM GMT ]
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன், பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் காவலில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சனல்4 ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எதுவும் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரானவர்களின் திட்ட மிட்ட செயற்பாடுகளே இவை. நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் திட்டமிட்ட வகையில் பரப்பி வருகிறார்கள்.
நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே இராணுவத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுக்கள்  இலங்கைக்கு புதியதல்ல.
இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித உண்மையான ஆதாரங்களும் இல்லை. அவ்வாறான சில குற்றச்செயல்களை குற்றவியல் விசாரணைத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
எனினும், போலியாக வெளியிடப்படும் இவ்வாறான புகைப்படங்கள் இணையத்தின் வாயிலாக இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்படுகின்றன என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் சனல்4 ஊடகம் வெளியிட்ட  இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற ஆதாரங்கள் தொடர்பான காணொளித் தடயங்களும் பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்ட படங்களையும் ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் Professor Derrick Pounder, அவை போலியானவை அல்ல என்பதை நிரூபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரிட்டன் தொலைக்காட்சியான சனல் 4 வெளியிட்ட படங்கள் போலியானவை! இலங்கை தூதர் காரியவசம் மறுப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013, 12:23.27 PM GMT ]
விடுதலைப் புலிகள் தலைவன் பிரபாகரனின் மகனை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றதற்கான ஆதாரத்தை புகைப்படமாக பிரிட்டன் தொலைக்காட்சியான சனல் 4 வெளியிட்டது. இப்படங்கள் போலியானவை என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது:
விடுதலைப் புலிகள் தலைவன் பிரபாகரனின் மகனை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதற்கான ஆதாரத்தை புகைப்படமாக பிரிட்டன் தொலைக்காட்சியான சேனல் 4 வெளியிட்டது.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் போது இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பாலச்சந்திரன் சில மணி நேரத்தில் பிணமாக காணப்பட்ட காட்சி இலங்கையின் போர் குற்றங்களுக்கு அசைக்க முடியாத சாட்சியாக இருக்கிறது.
சிறுவன் பாலச்சந்திரன் நெஞ்சை 5 துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன. இந்நிலையில், சனல் 4 வெளியிட்ட படங்கள் போலியானவை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவுக்கான இலங்கை தூதர் காரியவசம்,
உள்நோக்கத்துடன் லண்டனில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும், இதற்கு பின்னால் எல்.டி.டி.ஈ ஆதரவு சக்திகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இந்த குற்றச்சாட்டில் புதிதாக எதுவும் இல்லையென என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் ஏதுமில்லையென என்று கூறியுள்ள அவர், இலங்கை அரசு மீது இதுபோன்ற ஆதாரமற்ற குற்றங்கள் கூறுவது வாடிக்கையாகிவிட்டது என்று கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten