சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
இது ஊடகவியலாளரைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி. எனவே, அவர் உடனடியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் நான் கலக்கமடைந்துள்ளேன்.
ஏனென்றால், அவர் ஒரு ஊடகவியலாளர். அவர் பொறுப்புக்கூறல், நீதித்துறை விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் செய்தித்தாள் ஒன்றில் பணியாற்றுபவர். இந்த விவகாரங்கள் என்னால் கவனிக்கப்படுபவை.
ஏனென்றால், அவர் ஒரு ஊடகவியலாளர். அவர் பொறுப்புக்கூறல், நீதித்துறை விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் செய்தித்தாள் ஒன்றில் பணியாற்றுபவர். இந்த விவகாரங்கள் என்னால் கவனிக்கப்படுபவை.
நீதிக்குப் புறம்பான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், இந்த வகையான நடத்தைகள், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு உள்ள தடைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, எனது கரிசனைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளேன்.
இந்தச் சம்பவத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் தொடர்புள்ளதா என்று சரியான விசாரணைகளை மேற்கொள்ளாமல் எந்த முடிவுக்கும் வரமுடியாது.
அதேவேளை, அவருக்குப் பிரத்தியேக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் நம்பும்படியான நம்பகமான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
2ம் இணைப்பு
இலங்கையின் ஊடகவியளார்களின் நிலைகுறித்து சிறப்பு கூட்டம் : ஐ.நா ஆணையாளர் நவநீதம்பிள்ளை
இலங்கைத் தீவில் ஊடகவியலாளர்களின் நிலைமைக் குறித்து விரைவில் தாம் ஒரு விசேட சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்யப் போவதாக ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காத் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகையான சண்டே லீடர் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளரின் இக்கருத்து வெளிவந்துள்ளது.
இவ்விவகாரம் சிறிலங்காவுக்கு மேலதிக அழுத்தங்களை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இறுதியாக சண்டே லீடர் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளானமை வருத்தமளிக்கின்றது
இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது வாடிக்கையான விடயமாக மாறிவிட்டது. இதற்காக நாள்தோறும் சர்வதேசத்தினால் கண்டனங்கள் வெளியிடப்படுகின்றன.
எனினும் அதனை சிறிலங்கா அரசாங்கம் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
எனினும் சிறிலங்கா அரசாங்கம் அதனை உரியமுறையில் நிறைவேற்றவில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் மனித உரிமைகள் அமர்வு இடம்பெறவுள்ள நிலையில்இ இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் சிறிலங்கா பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கும் வாய்ப்புக்கள் உள்ளது.
| UN ‘deeply disturbed’ by Sri Lankan shooting |
| [ Sunday, 17 February 2013, 05:14.33 AM GMT +05:30 ] |
| Ms Pillay said: “It’s an act of attempted assassination so he needs to be protected immediately.” Mr Shauketaly, 52, who holds joint British and Sri Lankan citizenship, is a reporter for the Sri Lankan newspaper The Sunday Leader. Ms Pillay said “I’m deeply disturbed by this particular shooting because it’s a journalist and he’s attached to a newspaper that’s known to be critical of the government - particularly on accountability and in justice issues - which are issues that I cover. And I will be reporting to the Human Rights Council my concern over extra judicial killings, abductions and this kind of treatment and suppression of freedom of expression.” The newspaper’s editor Sakunthala Perera said the journalist was shot while he was on the telephone discussing a story due to appear in this week’s edition. Police said three men broke into his house and opened fire on him while he was in his bedroom. The journalist, whose family live in Colywn Bay in Wales, was rushed to hospital with bullet wounds in his neck. http://eng.lankasri.com/view.php?224Old0ac55YOd4e3KMC302cAmB3ddeZBmI203eWAA2e4IY5naca3lOy42 |
Geen opmerkingen:
Een reactie posten