தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 februari 2013

அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பாலசந்திரன்!


அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பாலசந்திரன்!

US remains “deeply concerned” about Sri Lanka

The spokesperson of the US State Department Victoria Nuland has said the US continues to be “deeply concerned” about allegations of human rights violations in Sri Lanka.
Nuland said during the State Department's Daily Press Briefing, we continue to be deeply concerned by allegations of violations of international humanitarian law and human rights in Sri Lanka.

At the end of this conflict, we support a full accounting for all who are engaged in acts of violated international humanitarian law.

We also welcome the report by UN High Commissioner for Human Rights Navi Pillay, noting the strong concern about the Government of Sri Lanka’s lack of action to address these longstanding issues of reconciliation and accountability. And as you know, we plan to introduce our own resolution on this into the Human Rights Council.


தேசியத் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.
வொசிங்டனில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாகவும் தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
சிறிலங்காவில் போரின் முடிவில், அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதமாபிமான சட்ட மீறல்களின் ஈடுபட்ட எல்லாத் தரப்பினரையும் முழுமையாக பொறுப்புக்கூறுவதற்கு ஆதரவளித்தோம்.
நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்குத் தீர்வுகாண சிறிலங்கா அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையான கவலை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையையும் அமெரிக்கா வரவேற்கிறது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நாம் இது தொடர்பாக, சொந்தமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கடந்த நான்கு வருடங்களாக கவலையும், கண்டனமுமாக காலத்தை கழிக்கின்றார்கள். இந்த முறையாவது உருப்படியான தீர்மானத்தினைக் கொண்டுவருவார்களா?
http://asrilanka.com/2013/02/20/14931


பாலச்சந்திரன் படுகொலை! மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை!


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன், இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.
வாசிங்டனில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த விக்ரோரியா நுலன்ட்,
இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போரின் முடிவில், அனைத்துலக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட எல்லாத் தரப்பினரையும் முழுமையாக பொறுப்புக் கூறுவதற்கு ஆதரவளித்தோம்.
நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்குத் தீர்வுகாண இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையான கவலை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாம் இது தொடர்பாக, சொந்தமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten