தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 februari 2013

பிரபாகரனின் குடும்பம் தொடர்பில் எதுவும் தெரியாது : அச்சத்தில் பொன்சேகா!!


பிரபாகரனின் குடும்பம் தொடர்பில் எதுவும் தெரியாது : அச்சத்தில் பொன்சேகா
Army had no information’s about Prabha’s family: Sarath Fonseka
Former Army Commander Sarath Fonseka said the Army had “no information” about the deaths of slain LTTE leader V. Prabhakarans, “ wife, daughter and youngest son”.
However Britian Channel -4 television as released death photographs of Balachandar Prabhakaran.
“After the final battle which went on from 2009 May 17 night- 19th till about 10 o clock, we only recovered Prabakharans body together with about 400 other terrorist dead bodies, and his elder son’s body, his elder son Charles Anthony.
These two bodies were personally identified by the present parliamentarian Karuna Amman, who was the LTTE military wing leader at the time before he joined the government. He himself went and identified these two bodies” he said.

http://eng.lankasri.com/view.php?223YY5B220eYmBB34eeKOOldccadQWAAcdddSKMMgaac4llOmae44dBmm2002355Y402

கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரான வே.பிரபாகரனின் மனைவி, மகள், இளைய மகன் ஆகியோரின் மரணம் பற்றி இராணுவம் எதையும் அறிந்திருக்கவில்லை என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
“2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி இரவு தொடங்கி 19ஆம் திகதி 10 மணி வரை நடந்த இறுதி யுத்தம் முடிந்த பின் நாம் பிரபாகரன், அவரது மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரன் மற்றும் 400 பயங்கரவாதிகளின் உடல்களை கண்டெடுத்தோம். பிரபாகரன் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி ஆகியோரின் உடலை அப்போது அமைச்சராக இருந்த கருணா அம்மான் அடையாளம் காட்டினார்” என அவர் குறிப்பிட்டார்.
புpரபாகரனின் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் எங்குள்ளனர் என்பதையிட்டு இராணுவத்திற்கு எதுவும் தெரியாது எனவும் அவர் கூறினார்.
பிரபாகரனின் மனைவி, மகள், இளைய மகன் ஆகியோர் வகித்த பதவிகள் பற்றி இராணுவத்திடம் தகவல்கள் இருக்கவில்லை. இவர்கள் இலங்கையில் இருந்தனரா அல்லது யுத்தத்தின்போது இறந்துவிட்டனரா என்பதெல்லாம் இராணுவத்திற்கு தெரியாது என சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரனை இராணுவம் பிடித்து வைத்திருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் சனல் – 4 இனால் வெளியிடப்பட்ட படங்கள் பற்றி கருத்து தெரிவித்த பொன்சேகா இராணுவத்திடம் பிரபாகரனின் இளைய மகன் பற்றிய தகவல் எதுவும் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
http://asrilanka.com/2013/02/20/14919

2009 மே 19 ஆம் திகதி 10 மணி வரை பாலச்சந்திரன் கொல்லப்படவில்லை : சரத்



தான் இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவோ, உயிரிழந்துள்ளதாகவோ அல்லது அவரின் சடலம் கிடைத்ததாகவோ எங்கேயும் பதிவாகவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பி. பி. சி. க்குத் தெரிவித்துள்ளார். 
இதேவேளை தான் தற்போது இராணுவத்தில் இல்லாவிட்டாலும் இராணுவத்தில் இருந்த காலத்தில் இடம்பெற்ற எந்தவொரு விடயம் தொடர்பிலும் சட்ட பூர்மான மற்றும் பக்கச்சார்பற்ற எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சி பிரித்தானியா மற்றும் இந்திய செய்திப் பத்திரிகைகள் ஆகியவற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியாகியிருந்த பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழப்பதற்கு முன்னரான புகைப்படங்கள் தொடர்பாக பி. பி. சி. சிங்கள சேவை கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பி. பி. சி. சிங்கள சேவையின் கேள்விகளுக்கு பதிலளித்த சரத் பொன்சேகா மேலும் தெரிவிக்கையில் ;
2009 மே 19 ஆம் திகதி 10 மணிக்கு யுத்தம் நிறைவடைந்தது. ஆனால். அக்காலப்பகுதியில் பாலச்சந்திரன் உயிரிழந்ததாகவோ அவரின் சடலம் கிடைத்ததாகவோ எங்கேயும் பதிவாகவில்லை. பிரபாகரனின் மூத்த மகன் சார்ல்ஸின் சடலம் கிடைத்தது என்பதே உறுதிப்படுத்தப்பட்டது என்றார்.
இவ்வேளை இது தொடர்பான விசாரணைகளுக்கு முகம் கொடுக்கத் தயாரா என பி.பி. சி. ஊடகவியலாளர் கேட்டபோது, தான் தற்போது இராணுவத்தில் இல்லாவிட்டாலும் இராணுவத்தில் இருந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விடயங்கள் தொடர்பாகவும் சட்ட பூர்வமான மற்றும் பக்கச்சார்பற்ற எந்தவொரு விசாரணைக்கும் முகம் கொடுக்கத் தயாராகவிருப்பதாக பொன்சேகா பதிலளித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten