தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 16 februari 2013

ஆட்டுக்குட்டிக்காக அடித்த பொலிசார் !


பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதி ! இலங்கை ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி இவ்வளவுதான் ! இதன் பின்னணியில் என்ன தான் நடந்தது ? வாருங்கள் எக்ஸ்ரே ரிப்போர்ட் ஒன்றுக்குச் செல்லலாம் !

மூதூர் ஜின்னா நகர் கிராமத்தை சேர்ந்த, 23 வயதான முஹம்மது மஹ்ரூப் அஸ்வர் என்பவர் கடந்த செய்வாய்கிழமை ஆட்டோ ஒன்றில் பயணித்துள்ளார். குறிப்பிட்ட தினத்தில் கடும் மழை பெய்துகொண்டு இருந்திருகிறது. மூதூர் பிரதேசம் நோக்கிச் சென்றுகொண்டு இருந்த ஆட்டோ ஒன்றில் கன்றுக் குட்டி ஒன்றை இவர் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றில் வைத்து, பொலிசார் இவர் பயணித்த ஆட்டோவை நிறுத்தியுள்ளார்கள். பின்னர் அவரை தாம் விசாரிக்கவேண்டும் என்று சொல்லி, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

இதனிடையே கன்றுக் குட்டியையும், பொலிசார் கொண்டுசென்றுவிட்டனர். மறு நாளை பலத்த அடி காயங்களோடு இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முகம், பிரடி என்பனவற்றில் பலத்த காயங்கள் இருப்பதாக மருதுவர்கள் தெரிவித்துள்ளார்கள். துப்பாக்கியின் மரப் பிடியால் தாக்கப்பட்டு, குறிப்பிட்ட நபரின் பற்கள் உடைந்துள்ளது. காட்டு மிருகங்களை அடிப்பதுபோல இவரை அடித்துப் போட்டுள்ளார்கள் இலங்கைப் பொலிசார். பொலிசார் இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றவேளை, கன்றுக்குட்டியையும் கொண்டுசென்றுவிட்டதாகவும், அதனைத் திருப்பிக் கேட்ட இடத்திலேயே அவரைப் பொலிசார் கடுமையாகத் தாக்கினார்கள் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற மிருகத்தகனமான தாக்குதல்களை முஸ்லீம் சகோதரர்கள் மீது இலங்கைப் பொலிசார் கட்டவிழ்த்துவிட்டுள்ளமை, கண்டிக்கத்தக்க விடையமாகும்.

Geen opmerkingen:

Een reactie posten