தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் பிளவு?

ஜனாதிபதி பொய்களை கூறி அரசியல் நடத்துகிறார்: சோமவன்ஸ அமரசிங்க
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 07:22.18 AM GMT ]
அரசியல் தந்திரமாகவே நாட்டிற்குள் 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் நாட்டில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது என ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்தார்.
மக்களை வாட்டும் ஆட்சியாளர்களுக்கு எதிராக அணித்திரள்வோம் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் அங்கம் வகிக்கும் இரண்டு கொள்கைகளை கொண்டுள்ளவர்கள் மத்தியில் கொள்கை மோதல்களை ஏற்படுத்தி சமூகத்தில் நிலவும் உண்மையான பிரச்சினைகளை மறைக்க அரசியல்வாதிகள் முயன்று வருகின்றனர்.
13வது திருத்தச் சட்டத்துடன் நாட்டில் புதிய அரசியல் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.
1948 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும், மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை மறந்தன அல்லது மறக்க செய்தன.
இதன் காரணமாக நாடு தற்போது இருள் சூழ்ந்த பாதாளத்திற்குள் விழுந்துள்ளது.
மக்கள் தமது வாக்குகளினால் தெரிவு செய்த அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்கும் உரிமை இருக்கின்றது.
மனிதர்களாக வாழ்வதற்கும், அதற்கு தேவையான அடிப்படை தேவைகளை பெற்று கொள்வதற்காகவுமே மக்கள் அரசாங்கம் ஒன்றை ஆட்சியில் அமர்த்துவதன் மூலம் எதிர்பார்க்கின்றனர்.
மக்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம், மருந்து, வேலைவாய்ப்பு உட்பட பல தேவைகள் உள்ளன.
இவற்றையெல்லாம் தருவதாக அரசியல்வாதிதகள் வாக்குறுதிகளை வழங்கி, வாக்குகளை பெறுகின்றனர். ஆட்சிக்கு வந்த பின்னர், வாக்குறுதிகளை மீறி செயற்படுகின்றனர்.
ஜனாதிபதி பொய்களை கூறி அரசியல் நடத்துகிறார். எதனையும் அறியாதவர் போல் ஜனாதிபதி இந்த விளையாட்டை விளையாடுகிறார்.
வடக்கு, கிழக்கில் 13யை பற்றி கூறுகின்றார். 13 பிளஸ் என்கின்றார். இவ்வாறு கூற நாடு, ஜனாதிபதி சொத்து அல்ல. இதற்கு நாட்டு மக்களின் பெரும்பாலானவர்கள் விருப்பம் தேவை.
தற்போது வடக்கு பற்றி பேசும் விடயங்ள் தேர்தலுக்கு பின்னர் என்னவாகும் என்று பார்ப்போம்.
தற்போது ஐக்கிய தேசியக்கட்சி பெயரளவிலான எதிர்க்கட்சியாக இருக்கின்றது. எதிர்க்கட்சி அரசாங்கத்தின் தேவைக்கு அமையவே செயற்படுகிறது.
ஜே.வி.பி சிறிய கட்சி என்றாலும் நாட்டில் முக்கியமான பிரச்சினைகளை பற்றி கலந்துரையாடி சரியானதை சரியாக செய்து வருகிறது என்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் பிளவு?
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 08:10.13 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் பிளவு ஏற்படும் நிலைமை தோன்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடத்தில் எழுந்த முரண்பாடுகள் காரணமாகவே இந்த நிலைமை உருவாகியுள்ளது.
வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என ஒருசாராரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட வேண்டும் என மற்றொரு சாராரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் வடக்கில் தனித்து மரச் சின்னத்திலேயே போட்டியிடுவது என கட்சியின் தலைமைத்துவமும் உயர்பீடமும் தீர்­மா­னித்­தி­ருந்­தது.
கட்சியின் இந்த தீர்மானத்தினால் அதிருப்தியடைந்துள்ள சிலர், முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்­டுள்­ள­தா­கவும் நடை­பெ­ற­வுள்ள தேர்தலில் அந்த முன்னணியின் பட்­டி­யலில் போட்­டி­யி­ட­வுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.
முஸ்லிம் காங்கிரஸ், அர­சுடன் இணைந்து போட்­டி­யிட வேண்டும் என கட்­சியின் தவி­சா­ளரும் அமைச்­ச­ர­மான பஷீர் சேகு­தாவூத் வலி­யு­றுத்தி வந்தார். இருப்­பினும் அவர் இறு­தி­யாக இடம்­பெற்ற கட்­சியின் உயர்­பீடக் கூட்­டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதனிடையே இறு­தி­யாக நடை­பெற்ற உயர்­பீடக் கூட்­டத்தில் கலந்து கொண்ட வடக்கை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பி­னர்கள் சிலர் அன்­றைய தினம் கட்சித் தலை­மை­யுடன் கடும் ­வாக்­கு­வா­தத்தில் ஈடுபட்டு கூட்­டத்­தி­லி­ருந்து வெளியே­றி­ய­தா­கவும் அதன் பின்னர் கட்­சி­யுடன் எந்­த­வித தொடர்­பி­னையும் ஏற்­ப­டுத்­த­வில்லை எனவும் காங்கிரஸின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்தார்.
இவ்­வாறு வெளி­ந­டப்புச் செய்த உறுப்பினர்களே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், வடமேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான யெஹியா ஆப்தீன் கட்சி மீது அதிருப்தி கொண்டு அரசாங்கத்தோடு இணைந்து கொண்டார்.
அவர் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாக புத்தளத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது

Geen opmerkingen:

Een reactie posten