[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 02:51.47 AM GMT ]
தமது கட்சியினர் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்யும் போது உறுப்பினர் ஒருவருடைய சத்தியக்கூற்று ஆனத்தின் கீழ் விழுந்து விட்டது.
இதனை அவதானித்த இன்னொரு உறுப்பினர் அதனை கண்டு மீண்டும் தெரிவத்தாட்சி அலுவலரிடம் ஒப்படைத்தோம். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் இந்தக் காரணத்தினால் எமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை ஏற்க முடியாது இதனால் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என்றார்.
இதேவேளை இரண்டு அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவர் கொலையுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் விளக்க மறியல் நீடிப்பு
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 02:48.12 AM GMT ]
பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 12 உத்தியோகத்தர்களின் விளக்க மறியல் உத்தரவு இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு திருகோணமலை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து உயர்தர மாணவர்களை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மாதம் 5ம் திகதி வரையில் சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் யூ.எல்.ஏ. அஸ்தார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர்களின் சார்பில் ஆஜரான முன்னாள் இராணுவ மேஜரும், சட்டத்தரணியுமான அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நீதிமன்றக் கட்டமைப்பை விடவும் நிறைவேற்று அதிகாரம் வலுவடைந்துள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தின் தேவைக்கு அமையவே இவ்வாறு சந்தேக நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறும் வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை மகிழ்ச்சிப்படுத்தவே நிறைவேற்று அதிகாரம் குறித்த விசேட அதிரடிப்படையினரை இவ்வாறு தடுத்த வைத்துள்ளது.
புதிதாக எவ்வித சாட்சியங்களும் சமர்ப்பிக்கடாத நிலையில் சந்தேக நபர்களின் விளக்க மறியலில் நீட்டிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களில் சிலர் நாட்டின் சமாதானத்தை நிலைநாட்ட பாதங்களை இழந்துள்ளனர் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமை மீறப்பட்டிருந்தால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பிக்க முடியும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten