தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 augustus 2013

மாணவியை அச்சுறுத்திய ஐந்து பேர் கைது- ஐந்து இளைஞர்கள் கடத்தப்பட்டனர்

த.தே.கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரின் வாகனத்தின் மீது அங்கஜன் குழு தாக்கியதாக முறைப்பாடு! மறுக்கிறார் அங்கஜன்
[ செவ்வாய்க்கிழமை, 20 ஓகஸ்ட் 2013, 06:48.12 PM GMT ]
வட மாகண சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பளராகவுள்ள ஒருவரால் தான் மீதான மக்கள் கவனத்தை திருப்பி அதனுடாக பிரபல்யத்தை பெறும் நோக்கோடு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதே சம்பவமே இதுவாகும்.
யாழ் நகர சிற்றூர்தி தரிப்பிடத்தில் அருகில் உள்ள எனது வியாபார நிலையத்திற்கு பிற்பகல் 3 மணியளவில் வருகை தந்த மேற்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் தம்பிராஜாவும் அவருடன் வந்த சில குண்டர்களும் முகாமையாளரிடம் என்னையும் எனது தந்தையாரையும் கேட்டு உரத்த குரலவில் சத்தமிட்டானர்.
தொடர்ந்து எனது நிறுவனத்தையும் அதன் முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிறுவனத்துக்கு சொந்தமான எனது வாகனத்தையும் படம் பிடிக்க முற்பட்ட வேளை அதனை தடுக்க சென்ற எமது நிறுவன முகமையாளரிடம் தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் செய்யும் உரிமை தமக்கே உண்டு எனவும் கொழும்பில் இருந்து வந்து இங்கு வந்து எவரும் அரசியல் செய்ய தேவையில்லை என்று கூறியதுடன் எனது மாவட்ட அமைப்பாளர் பதவியை இராஜனமா செய்ய வேண்டும் அல்லாவிட்டால எனது உயிருக்கு எனது தந்தையின் உயிருக்கும் ஆபத்து எற்படும் என்பதையும் வலியுறுத்தி சத்தமிட்டு கூறியிருந்தார்.
அது மட்டுமன்றி எனக்கு சொந்தமான வாகனத்தையும் சேதப்படுத்தியுடன் எமது ஆதரவாளர்களுடன் வாய்ர்த்தக்கத்திலும் ஈடுபட்டதுடன் தன்னுடன் வந்த குண்டர்களை கொண்டு தனது வாகனத்தையும் தாக்கியுள்ளார்.
இம்முறை தேர்தலில் புதுமுக வேட்பளராகவுள்ள, மக்கள் அறிமுகமற்றவரான மேற்படி வேட்பாளர் மக்களிடையேயான தனது அனுதாப அரசியலை பெறும் நோக்கோடு செய்யப்பட்ட ஒரு செயற்படே இதுவாகும். மேலும் எமது வியாபர நிறுவனத்திற்கு வந்து எம்மை வலிந்து சண்டைக்கு இழுப்பதன் மூலம் தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக என் மீதான அவதூறையும் தனக்கான அனுதாபத்தையும் தேடிக் கொள்வதே அவரின் குறியாக காணப்பட்டது.
எனவே இவ்வறானவர்களை மக்கள் இணங்கண்டு கொள்ள வேண்டும் உண்மைத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும். இது தொடர்பாக யாழ் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் அடாவடி மீண்டும் குடாநாட்டில் அரங்கேற்றப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.குடாநாட்டில் முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இன்று மாலை 5.15 மணியளவில் யாழ்.நகரப் பகுதியில் வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை வேட்பாளர் எஸ்.தம்பிராசா, மற்றும் காரைநகர் பிரதேச சபையின் தலைவர் ஆனைமுகன் ஆகியோர் பயணித்த வாகனங்களை,
அங்கஜனின் ஆதரவாளர்கள் மற்றும் தந்தையார் வாழிமறித்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்து நொறுக்கியுள்ளதுடன், வேட்பாளரை வாகனத்தின் பாரம் உயர்த்தியினால் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார்.
மேலும் பெரிய தமிழ்த் தேசியப் பற்றாளர்களா நீங்கள்? என்ற கேள்வி எழுப்பிக் கொண்டே கைத்துப்பாக்கியை எடுத்து வேட்பாளரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவும் முயற்சித்துள்ளார்.
அதற்குள் அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூடிவிட அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் துப்பாக்கிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து அங்கஜனின் தந்தை அருகிலுள்ள புடவை விற்பனை நிலையத்திற்குள் சென்று ஒழிந்து கொண்டார்.
இதனையடுத்து கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா குறித்த துப்பாக்கிதாரியை எதற்காக கைது செய்யவில்லை என பொலிஸாருடன் வாதாடியதுடன், அங்கஜனின் தந்தை ஒழிந்திருந்த வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்டார்.
அப்போதும் பொலிஸார் அங்கஜனின் தந்தையாரை கைது செய்யாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் வர்த்தக நிலையத்தில் பின் கதவால் தப்பித்து ஓடிவிட்டார்.
இதனையடுத்து தம்பிராசாவை பொலிஸார் முறைப்பாடு பெறுவதற்கான அழைத்துச் சென்றுள்ளனர். இதேவேளை அங்கஜனின் தந்தைக்கு பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் பாதுகாப்பு வழங்கினர்.
மேலும் இதேபோன்றதொரு சம்பவம் கடந்த யாழ்.மாநகரசபை தேர்தலின்போதும் நடைபெற்றிருந்தது, அங்கஜனின் தந்தை யாழ்.மாநகரசபை முதல்வரின் நெற்றியில் கைத்துப்பாக்கியை வைத்து சுட முயன்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலாவது தேர்தல் வன்முறை இன்று மாலை 6மணிக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

மாணவியை அச்சுறுத்திய ஐந்து பேர் கைது- ஐந்து இளைஞர்கள் கடத்தப்பட்டனர்
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 01:29.17 AM GMT ]
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 2 பாடசாலை மாணவர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து ஹோமாகம நோக்கி பேருந்தில் பயணித்து கொண்டிருந்த குறித்த பாடசாலை மாணவி, மஹரகம ஆசிரிய வித்தியாலத்திற்கு அருகாமையில் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உந்துருளியில் சென்ற இரண்டு மாணவர்களும், மூன்று இளைஞர்களும் குறித்த அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் பொரளை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலுக்கு உள்ளான பாடசாலை மாணவி நுகேகொடை பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகளீர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்தவர் எனவும் காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன், இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கம பிரதேசத்தில் ஐந்து இளைஞர்கள் கடத்தப்பட்டனர்
கொஸ்கம பிரதேசத்தில் ஐந்து இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
அவிசாவளை கொஸ்கம பிரதேச்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
19 முதல் 21 வயது வரையிலான இளைஞர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களே கடத்தப்பட்டுள்ளனர்.
பத்து பேரைக் கொண்ட இனந்தெரியாத கும்பலொன்றே இவ்வாறு கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten