[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 05:01.34 AM GMT ]
இப் பரப்புரை நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன் எம்.ஏ சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களான ப.அரியரத்தினம், த.குருகுலராஜா, கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.
மேற்குறித்த பகுதிகளிலுள்ள வர்த்தகர்கள் பொதுமக்கள் ஆகியோர் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டிருந்த கூட்டமைப்பு அங்கத்தவர்களை இன்முகத்துடன் வரவேற்றதுடன் அங்கு கூறப்பட்ட விடயங்களை ஆர்வத்துடன் செவிமடுத்ததைக் காணக் கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பச்சிளம் குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் அதிசய நாடாக இலங்கை
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 06:08.54 AM GMT ]
கடந்த ஆண்டின் ஆறு மாதங்களில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சித்ரவதைகள் என்பன இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அந்த அமைப்பின் தலைவி சமன்மலி குணசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்த அறிக்கையின் பிரகாரம், 2011 ஆம் ஆண்டில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் ஆயிரத்து 443 நடந்துள்ளன.
2012 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 412 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் பெருபாலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுக்கு அரசியல்வாதிகளே பொறுப்பு கூறவேண்டும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.
இந்த நிலைமையை ஒழிக்க நாட்டின் ஆட்சியாளர்கள் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் சகலருக்கு எதிராகவும் மக்கள் அணித்திரள வேண்டும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten