[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 10:43.10 AM GMT ]
தொண்டி அருகே நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கச்சதீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
ப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஆறு பேரையும் தாக்கியதோடு அவர்களின் மீன்பிடிவலைகளையும் சேதப்படுத்தி, பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் வீசினர்.
இந்த சம்பவத்தில், மீனவர் காந்தியின் கை எலும்பு முறிவு ஏற்பட்டு புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ``இலங்கை கடற்படை எங்களை தரக்குறைவாக பேசி தாக்குகிறது. கச்சதீவு அருகே, மீன்பிடிக்க செல்லவே அச்சமாக உள்ளது'' என்றனர்.
இலங்கையில் கண்ணிவெடி அகற்ற கூடுதல் நிதி தேவை: இளவரசர் ஹரி
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 10:44.55 AM GMT ]
தற்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ள இளவரசர் ஹரி, போதியளவான நிதி கிடைக்குமிடத்து அடுத்த 5 வருடங்களில் கண்ணிவெடிகளை அகற்றக்கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது என செய்திச் சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், வெடிக்கு எதிரான ஹலோ தர்ம நிறுவனத்தின் ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மத்தியில் ஹரி உரையாற்றினார்.
'இந்த இலட்சியத்தில் மிக உணர்வுபூர்வமான நம்பிக்கை கொண்ட எனது தாய், ஹலோவோடு இணைந்து நான் செயற்படுவதையிட்டு பெருமை அடைவார்' என அவர் கூறினார்.
ஹலோ எந்தவொரு வேளையிலும் தொழிற்படும் 7,000 கண்ணிவெடி அகற்றுவோரை களத்தில் கொண்டிருக்கும் எனவும் அவர் கூறினார்.
இலங்கை, மொஸாம்பிக், கொஸோவா, சோமாலியா, ஜோர்ஜியா, ஆமினியா ஆகிய நாடுகளில் நிதி தொடர்ந்து கிடைக்குமாயின் 5 வருடங்களில் கண்ணிவெடிகளை பூரணமாக அகற்றிவிட முடியும் எனவும் அவர் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten