தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 10 mei 2013

கூட்டமைப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியையும் இணைத்துக் கொள்ள வேண்டும்!- கலையரசன்


இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: கருணாநிதி - கச்சதீவை மீட்க வழக்கு
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 09:20.21 AM GMT ]
இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், 'டெசோ' அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்களும், ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட கொமன்வெல்த் மாநாட்டினை இலங்கையிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர்.
பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்திய அரசு அதைப் பற்றி எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. கொமன்வெல்த் மாநாட்டினை இலங்கையிலே நடத்திட முடிவு செய்யப்பட்டு விட்டது என்பதைப் போல இலங்கையில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வருகின்றனவாம்.
ஏற்கனவே கனடா நாட்டின் சார்பில் இலங்கை கொமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிப்பது எனத் தெரிவிக்கப்பட்டு விட்டது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக கொமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, அவுஸ்திரேலிய மனித உரிமை சட்ட மையம் போன்றவை இலங்கையில் இந்த மாநாட்டினை நடத்தக்கூடாதென எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.
பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இளவரசர் சார்ள்சை அனுப்பி வைக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்துள்ளன.
கொமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு என்று ஒன்று உருவாக்கப்பட்ட பிறகு, இதுவரை நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்ட எலிசபெத் ராணி இலங்கை மாநாட்டினைப் புறக்கணித்திருப்பது என்பது முக்கியமான தகவலாகும்.
கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்காக அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் பிரேசர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கொமன்வெல்த்" சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை தென்னாபிரிக்காவில் உள்ள "கேப்டவுன்" நகரத்தில் நடைபெற்றபோது கொமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில் கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும், தொடர்ந்து இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கொமன்வெல்த் போற்றி வரும் அடிப்படை கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியமானது.
கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள்.
இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்று ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழுவின் அறிக்கைக்குப் பிறகும், இலங்கையில் நவம்பர் மாதத்தில் கொமன்வெல்த் மாநாடு நடைபெறுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது.
இனப் படுகொலை, மனித உரிமை மீறல்கள், பல்வேறு வகையான போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கு ஆளாகியுள்ள ராஜபக்சவை, நம்பிக்கையுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக் கமிஷன் முன் நிறுத்தவேண்டுமென "டெசோ" தொடர்ந்து கோரி வருகிறது.
கொமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு கொமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்ச இருப்பார் என்றும், அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது பிரச்சினையாக ஆகி விடக்கூடுமென்றும்; வலிமையான கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக்கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயானால், அங்கே நடைபெற்ற இனப் படுகொலைகளை இந்தியா ஆதரித்தது போலாகி விடும்.
எனவே இனியாவது இந்தியா, தமிழர்களும் இந்தியர்களில் ஒரு பிரிவினர் தான் என்ற உள்ளுணர்வோடு, நேசத்தோடு ஆதரவுக்கரம் நீட்ட முன் வர வேண்டும்.
தமிழக மக்களின் மற்றும் உலகத் தமிழர்களின் இந்த வேண்டுகோளையாவது இந்தியா ஏற்றுக்கொண்டு, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்வதோடு, கொமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறாத வகையில் மற்ற உறுப்பினர் நாடுகளின் ஆதரவையும் திரட்டிடும் முயற்சியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்தியா புரிந்து கொண்டு, அதற்கேற்ற வியூகம் வகுத்துச் செயல்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்" என்று
கூறியுள்ளார்.
2ம் இணைப்பு
கச்சதீவை மீட்க   உச்சநீதிமன்றத்தில் கருணாநிதி வழக்கு
கச்சதீவை மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கச்சதீவு விவகாரத்தில் கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கைகளை செல்லாது என அறிவிக்கவும் கச்சதீவை இந்தியாவுடன் மீண்டும் இணைக்க உத்தரவிடவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களை தடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதல்களில் பலியான மீனவர்கள் மற்றும் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டமைப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியையும் இணைத்துக் கொள்ள வேண்டும்!- கலையரசன்
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 09:55.22 AM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கஜேந்திரகுமார் தலமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென மட்டு அம்பாறை மாவட்ட புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் திரு.கலையரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த அவர்,
நாளை மன்னார் ஆயர் அவர்களின் தலமையில் நடைபெறவிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டத்திற்கு கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியையும் இணைப்பதற்கு ஆயர் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.
கடந்த 2001ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் கூட்டமைப்;பில் கஜேந்திரகுமார் அவர்களும் அங்கம் வகித்திருந்தமை யாவரும் அறிந்த விடயம் இருந்தும் இடையில் ஏற்பட்ட சில மனக்கசப்புக்கள் காரணமாக அவர்கள் கூட்டமைப்பில் இருந்து விலகியதுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னனி என்ற கட்சியையும் உருவாக்கி செயற்பட்டு வருகின்றனர்;
கூட்டமைப்பில் இருந்து இவர்கள் விலகியிருந்தாலும் இவர்களின் கொள்கைள் தமிழ்; மக்களின் நலன்சார்;ந்ததாகவே உள்ளது. இவர்கள் எந்தக் கட்சியையும் சாராது கடந்த 2001ஆம் ஆண்டு நேரடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் எனவே இவர்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைகளை அரசாங்கத்திடமிருந்து நாம் போராடிப் பெறவேண்டுமானால் தமிழ் கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டு புரிந்துணர்வுடன் ஒரே குடையின் கீழ் அணிதிரள வேண்டும் என்பதே மட்டு அம்பாறை தமிழர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இது வெறுமனே கூட்டமைப்பை பதிவு செய்வதால் மட்டும் நடந்துவிடப்போவதில்லை கூட்டமைப்பின் பதிவு அரசியல் கட்சிகளின் இருப்பை பாதுகாப்பதற்கு உதவுமே தவிர கட்சி ஒற்றுமையை உருவாக்க உதவப்போவதில்லை.
தமிழ் மக்களை பொருத்தவரை அனைத்துக் கட்சிகளும் தங்களது கட்சி அடையாளங்களை மறந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒரே கொள்கையின் கீழ் ஒரே அடையாளத்துடன் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான்.
இதனை மனதில் கொண்டு நாளை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் மன்னார் ஆயர் அவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னனியையும் சேர்த்துக் கொண்டு கூட்டமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுக்களை மேற்கொள்ள வேண்டும் என்றார். 


Geen opmerkingen:

Een reactie posten