தோற்றுப் போனதால் நடுவரைத் தாக்கிய ஜனாதிபதியின் மகன் ரோகித ராஜபக்ச போட்டியில் இடைநிறுத்தம்?
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:11.57 PM GMT ]
இந்த மாதம் நடந்த போட்டி ஒன்றில் நடுவரைத் தாக்கிய இலங்கை ஜனாதிபதியின் மகன் ரோகித ராஜபக்ச, போட்டிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
எனினும், இலங்கை ரக்பி உதைபந்தாட்ட ஒன்றியம் அதனை நிராகரித்துள்ளது.
எனினும், இலங்கை ரக்பி உதைபந்தாட்ட ஒன்றியம் அதனை நிராகரித்துள்ளது.
அதேவேளை போட்டியில் தமது கடற்படை அணி தோல்வியடைந்ததும், 22வயதான ரோகித ராஜபக்ச, நடுவர் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது வெறும் வாய்த்தர்க்கமே என்று தாம் நம்புவதாகவும், ஆனாலும் இதுகுறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கையின் உயர்மட்ட ரக்பி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதியின் மூன்று புதல்வர்களும் ரக்பி போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இலங்கை ஜனாதிபதியின் மூன்று புதல்வர்களும் ரக்பி போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இரண்டாவது புதல்வர் யோசித தேசிய அணிக்குத் தலைமை தாங்கும் அதேவேளை, ஏனைய இருவரும் கடற்படை அணிக்காக விளையாடி வருகின்றனர்.
இரண்டாவது புதல்வர் தேசிய அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டதால் மூத்த வீரர்கள் விலகும் நிலை ஏற்பட்டது.
எனினும், ஐந்து ஆசிய நாடுகள் பங்கேற்ற சுற்றுப்போட்டியில் இலங்கை தேசிய அணி வெற்றி பெற்றது.
கடந்த 5ம் நாள் காவல்துறை அணியுடன் நடந்த போட்டியில் இலங்கை கடற்படை அணி தோல்வியடைந்ததை அடுத்து இலங்கை ஜனாதிபதியின் இளைய மகன் ரோகித ராஜபக்ச, நடுவரான திமித்ரி குணசேகரவின் சட்டையைப் பிடித்து தாக்கியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
ஏனைய போட்டி அதிகாரிகளும், யோசித ராஜபக்சவும் தலையிட்டு நிலைமையை சமாளித்தனர்.
இந்தநிலையில், இலங்கை ரக்பி உதைபந்தாட்ட ஒன்றியத்தின் சிறப்புக் குழுவின் விசாரணைகள் முடியும் வரை ரோகிதவும், இன்னொரு வீரரும், போட்டிகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இலங்கை ரக்பி உதைபந்தாட்ட ஒன்றியத்தின் தலைவரான, அசங்க செனிவிரத்ன, பெளதிக ரீதியான தாக்குதல் இடம்பெறவில்லை என்று தாம் நம்புவதாகவும், இருந்த போதிலும், தேவையற்ற வார்த்தைகள் பரிமாறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ரோகித இதில் தொடர்புபட்டுள்ளது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும், துரதிஸ்டவசமான இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, லங்காதீப செய்தியை நிராகரித்த இலங்கை ரக்பி உதைபந்தாட்ட ஒன்றியத்தின் செயலர் றிஸ்லி இலியாஸ், விசாரணைகள் தொடர்வதாகவும், ரோகிதவை இடைநிறுத்தும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை விசாரிக்க வழக்கமான ஒழுக்காற்றுக் குழு மறுத்து விட்ட நிலையில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கை அதிபரின் மூத்த புதல்வர் நாமல், ஒட்டுமொத்த சம்பவங்களும் புரிதலின்மையால் ஏற்பட்டது என்று ருவிட்டரில் கூறியுள்ளார்.
அதேவேளை இலங்கை அதிபரின் மூத்த புதல்வர் நாமல், ஒட்டுமொத்த சம்பவங்களும் புரிதலின்மையால் ஏற்பட்டது என்று ருவிட்டரில் கூறியுள்ளார்.
எனினும் தாக்குதல் நடத்தப்பட்டதா என்று கேளவிக்கு அவர் பதில் கூறவில்லை.
பேருந்தில் பெண்ணொருவர் மீது தவறாக நடக்க முயன்ற இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்!
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:51.21 PM GMT ]
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பேருந்து தேநீர் இடைவேளைக்காக மேரவெவ சந்தியில் நிறுத்தப்பட்டவேளை, சந்தேக நபர் பேருந்தில் ஏறி குறித்த பெண்ணிற்கருகில் இருந்துள்ளார்.
பின்னர் பாலியல் ரீதியாக குறித்த பெண்ணுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். குறித்த பெண் சத்தம் போட்டு, சம்பவம் தொடர்பாக பேருந்து நடத்துனரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பேருந்தின் சாரதி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று குறித்த சந்தேக நபரை ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் இராணுவ அதிகாரியான குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten