தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 mei 2013

இலங்கையில் கடந்த ஆண்டு 20 காணாமல்போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன

துண்டுப் பிரசுரங்களை வீசியதாக கைதான இரண்டு இளைஞர்களும் பிணையில் விடுதலை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 12:35.13 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வீசியதான குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அரசின் உதவியுடன் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் போது அதில் முஸ்லிம்கள் உள்வாங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாக பொலிஸார் கூறுகிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிங்கள கிராமமான மங்களகம, தமிழ் கிராமமான பெரியபுல்லுமலை மற்றும் முஸ்லிம் கிராமமான உறுகாமம் ஆகிய இடங்களில் இது தொடர்பான நிகழ்வுகள் புதன்கிழமை இடம்பெற்றன.

இதன்போது பெரியபுல்லுமலை மற்றும் உறுகாமம் ஆகிய இடங்களில் இது தொடர்பான விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்கப்படுவது தொடர்பில் எதிர்ப்பை தெரிவித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் இந்த இரு தமிழ் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உறுகாமம்வாழ் தமிழ் மக்கள் எனும் பெயரில் வெளியாகியுள்ள அந்தத் துண்டுப் பிரசுரங்களில் இது இந்திய அரசின் வீட்டுத் திட்டமா அல்லது இஸ்லாமியக் குடியேற்றத் திட்டமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் காரணமாக 1990 ஆம் ஆண்டு உறுகாமத்திலிருந்து வெளியேறிய அனைத்து முஸ்லிம் குடும்பங்களுக்கும் ஏறாவூர் பகுதியில் வீடுகளும் காணிகளும் வழங்கப்பட்டுவிட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.

புதன்கிழமை இலங்கைக்கான இந்தியத் தூதர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இந்திய உதவியுடனான வீடுகள் கட்டும் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போதே இந்தத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகிறார்கள்.

இவ்வகையான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்கள் எனும் குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களையும் நீதிமன்றத்தின்முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறுகிறார்கள்.

http://www.tamilwin.net/show-RUmryFRXNbfp1.html

இலங்கையில் கடந்த ஆண்டு 20 காணாமல்போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:13.57 PM GMT ]
இலங்கையில் கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அனைத்துலக மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குற்றவாளிகள், வர்த்தகர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இவ்வாறு காணாமல் போயுள்ளனர் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும் தரப்பினர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கைதுகள், கடத்தல்கள், சித்திரவதைகள் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைப் பயன்படுத்தி மாற்றுக் கொள்கையாளர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக மேலும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten