மகாராணிக்கு பதிலாக பிரித்தானிய அரசர் சார்ல்ஸ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் மகாராணி கலந்து கொள்ளாமைக்கு தெளிவான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எனினும் மகாராணி தனது அதிகாரங்களை மகனுக்கு விட்டுக் கொடுக்கும் திட்டமாக இது இருக்கலாம் என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மோசமாக இருப்பதால் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டை வெளிநாடுகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் மகாராணி இதில் பங்கேற்க கூடாது எனவும் தொடர்ச்சியாக அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் பிரித்தானிய மகாராணியின் செய்தி வெளியாகியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten