தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 mei 2013

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலி கைது!


யாழில் வாள்வெட்டுக்கு இலக்காகி நால்வர் படுகாயம்
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 03:55.32 PM GMT ]
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை துண்டி சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கொடுத்த பணத்தினை கேட்டு சென்ற இருவர் மீது வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட குழுவினர் கைகலப்பில் ஈடுபட்டதுடன், வாளால் வெட்டியுள்ளனர். இரு சாராருக்குமிடையே இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆரியகுளம் பகுதியைச் சேர்ந்த குணசேகரம் பிரேமம்காந் (வயது 26), சதர்சன் நிரூபன் (வயது 27), குணசேகரம் பிரசாத் (வயது 24), வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த காந்தன் ஆகிய நால்வரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
வெட்டுக் காயங்களுக்கு இலக்காகிய நால்வரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலத்த காயங்களுடன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலி கைது
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 03:39.53 AM GMT ]
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலி இன்று காலை குற்றவிசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலன்னாவை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே காலை 6.45 அளவில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாத் சாலி அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது வெளியிட்ட கருத்துகள் காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த கைது இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அசாத் சாலி பாதுகாப்பு பிரிவினரால் பின்தொடரப்பட்டு வந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு, பின்னர் பிரிந்து சென்று அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்ற நிலையில் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten