பத்தரமுல்லையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்விற்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இவ்வாறான சலுகைகளை வழங்கி மக்களை இவ்வளவு காலமும் ஏமற்றியது போதும், உயர்த்திய மின்கட்டணத்தை உடனடியாக அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும்.
நாடு முழுவதும் ராஜபக்சவின் பெயரில் பல திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
அதேவகையான ஒரு திட்டம்தான் இந்த மின் கட்டண உயர்வும். அதற்கு அரசாங்கம் தான் முழுப்பொறுப்பும் கூற வேண்டும்.
தற்போதைய பொய் கூறும் அரசாங்கத்தைப் போல இலங்கையின் வரலாற்றில் எந்த அரசும் இருந்ததில்லை.
இதேநேரம் ஜனாதிபதியின் உள்நோக்கம் எமக்கு நன்றாகத் தெரியும்.
மக்களின் எதிர்ப்பிற்கு தற்போது பயந்து போயுள்ள அரசாங்கம் மின்கட்டண உயர்வுக்கு சலுகை வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது.
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் எமது போராட்டம் நிறைவு பெறாது.
இந்த பொய்க்கார குடும்ப ஆட்சியை அடியோடு இல்லாதொழிக்கும் வரை நாம் போராடுவோம்.
எனவே இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் மக்கள் அனைவரும் எம்முடன் இணைந்து போராட்டத்தை மேற்கொண்டால் முழுமையான வெற்றியைப் பெறலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten