இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை, பிரித்தானியா மகாராணி இரண்டாவது எலிசபெத் புறக்கணித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 15 தொடக்கம் 17ம் நாள் வரை இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டில், பிரித்தானிய மகாராணி பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்ட போதும் அது தற்போது உறுதியாகிவிட்டது.
இலங்கையின் மனிதஉரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் அரச தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கி கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பிரித்தானிய மகாராணி பங்கேற்காவிட்டால் இலங்கை அரசாங்கத்துக்கு முக்கியமான பின்னடைவாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் பிரித்தானிய மகாராணி வெளியிட்ட அறிக்கையில், கொமன்வெல்த் நாடுகள் நல்லாட்சி, மனிதஉரிமைகளுக்கு மதிப்பளித்தல், கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், சட்டத்தின் ஆட்சி போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:
Een reactie posten