கொழும்பு பஸ்சை விட்டு இறங்கியவர் திடீர் மரணம்
07 May, 2013 by admin
கொக்குவில் கிழக்கு பிறவுண் வீதியைச் சோந்த கே.ஈஸ்வரன் (வயது 54) என்பவரே இவ்வாறு அதிகாலையில் கொழும்பில் இருந்து வந்த பஸ் வண்டியில் வந்து இறங்கியதும் மரணம் அடைந்தார்.
குறிப்பட்ட தகவல் அறிந்து வந்து கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மரண விசாரனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 08 பேரை கைதுசெய்துள்ளனர்.
08 May, 2013 by admin
சந்தேக நபர் ஒருவரின் வீட்டில் பாரிய குழி தோண்டப்படுவதையும் பூஜைகள் நடைபெறுவதையும் கண்ட இப்பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்தச் சந்தேக நபர்கள் குறித்த வீட்டில் குழி தோண்டிக்கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், இவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten